India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உதகை நகரில் மேல் தலையாட்டு மந்து என்ற இடத்தின் அருகே மூலநகர் பகுதி காட்டில் இன்று பகல் ஒரு மணியளவில் காட்டு தீ ஏற்பட்டது . காய்ந்து கிடந்த செடி, கொடிகளில் எரிந்த தீ காற்றின் வேகம் காரணமாக மரங்களில் பரவியது . தகவலறிந்த, உதகை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய குழுவினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி காட்டு தீயை அணைத்தனர் .

தேர்தல் அறிக்கையில் மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுப்போம் என தமிழக முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இதைக்கண்டித்து, கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், ஒசுர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தீவிரமடைந்தால், கர்நாடகத்தில் தமிழ் சினிமாக்கள் திரையிட விடமாட்டோம், எல்லைப்பகுதிகளை அடைப்போம் என எச்சரித்தனர்

ராமமூர்த்தி நகர் சோதனை சாவடியில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில் அதில் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ.450000 எடுத்துச் சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக அதனை கைப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

நாகை மக்களவைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளராக கார்த்திகா அறிவிக்கப்பட்டு பல நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் இன்று தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்சிடம் வழங்கினார். இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், அகஸ்டின், அற்புதராஜ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் திருக்கல்யாண விழா ஏப்ரல்.21 நடைபெற உள்ளது. இதனையடுத்து, நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் நேரடியாக கோவில் நிர்வாகத்திடம் வழங்க கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் ஒளிப்பதிவு காட்சிகள்(வீடியோ) மட்டுமே வெளியிட வேண்டும், ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதி பெற்ற, அனுமதிக்கப்பட்ட விளம்பரத்தை மட்டுமே அச்சிடவோ, ஒளிபரப்பவோ வேண்டும். குறிப்பாக, அனுமதி பெற்றுள்ள எண் விளம்பரத்தில் கண்டிப்பாக எளிதில் தெரியும் வண்ணம் இடம்பெற்றிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மதுரையில் விரைவில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் இத்திட்டத்தின் வழித்தடத்தை வெளியிட்டுள்ளது. திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கோரிப்பாளையம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்றம் வழியாக ஒத்தக்கடை வரை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் இன்று அவர் அடையாறு – பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் அலுவலகத்தில் திமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்தார். உடன் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் இன்று அவர் தென்சென்னை தொகுதி தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் தமிழக பா.ஜ.க துணை தலைவர் கரு.நாகராஜன் உடனிருந்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அரக்கோணம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.எல்.விஜயன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முக்கிய பொறுப்பாளர்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.