Tamilnadu

News March 26, 2024

திருவள்ளூர்: 10ஆம் வகுப்பு தேர்வு துவக்கம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில், 16,348 மாணவர்களும், 16,583 மாணவியரும் என மொத்தம், 32,931 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதால் தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு தேர்வு எழுவதற்கு மேஜைகளில் பதிவெண்கள் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 26, 2024

ராணிப்பேட்டை: 12,038 விளம்பரங்கள் அகற்றம்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி, பொது மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த 12,038 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் வளர்மதி நேற்று(மார்ச் 26) தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

திமுக வேட்பாளர் சொத்து மதிப்பு வெளியீடு

image

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனது பெயரில் ரூ. 4.69 லட்சம், மனைவி பெயரில் ரூ.7.28லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.14 லட்சம் மதிப்பிலான பூர்விக அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தனது பெயரில் ரூ.3.10 லட்சம், மனைவி பெயரில் ரூ.4.75 லட்சம் என மொத்தம் ரூ.7.85 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

News March 26, 2024

நெல்லை வருகை தரும் அண்ணாமலை

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நெல்லைக்கு வருகை தந்து வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News March 26, 2024

சேத்துப்பட்டில் திமுக தேர்தல் பிரச்சாரம்

image

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. எம். எஸ் தரணிவேந்தனை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு பகுதியில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

News March 26, 2024

திண்டுக்கல் கொலையில் 3 பேர் கைது

image

திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள சி.கே.சி.எம் காலனி பகுதியைச் சேர்ந்த வீராகௌதம் கொலை செய்யப்பட்ட வழக்கில்  போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சவேரியார் பாளையம் நேருஜி நகர் பகுதியை சேர்ந்த அஜய்குமார் (24), மதுரை சேர்ந்த விஜய் ஆதி ராஜ், திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த மோகன் சுந்தர் (38) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

News March 26, 2024

பிரான்ஸ் செல்லும் திருவள்ளுவர் சிலை

image

பிரான்சில் இயங்கி வரும் திருவள்ளுவர் கலைக்கூடத்தில் வரும் ஏப். 13 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக மாமல்லபுரம், வடகடம்பாடி தனியார் சிற்பக்கூடத்தில் உலோக சிற்ப பிரிவின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர் ராஜேந்திரன் வடிவமைத்த 200 கிலோ எடை கொண்ட 4 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் வெண்கல சிலை நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News March 26, 2024

நெல்லையில் பிரச்சார விழிப்புணர்வு வாகனம்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து தனியார் தொலைக்காட்சியின் பிரச்சார பயண விழிப்புணர்வு வாகனத்தினை இன்று (மார்ச் 26) திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் கா.ப கார்த்திகேயன் தொடங்கிவைத்தார். மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

News March 26, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த சத்தம்

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு பலத்த சத்தம் கேட்ட நிலையில் இந்த சத்தம் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் வரை உள்ள கிராமத்திற்கு சட்டம் கேட்ட நிலையில் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த அதிர்வை கண்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாமா என அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் வெளியேறி உள்ளனர்.

News March 26, 2024

தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

image

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் சிலால் 4 ரோட்டில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா தொடங்கி வைத்தார். 3 கி.மீ தொலைவில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!