Tamilnadu

News April 11, 2024

சட்டென்று மாறுது வானிலை

image

இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 11, 2024

ஆரத்தழுவி ரமலான் வாழ்த்து கூறிய ஊராட்சி மன்ற தலைவர்

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிவாசலில் இன்று உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதா பானு சாதிக் கைகுலுக்கி ஆரத்தழுவி அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News April 11, 2024

I.N.D.I.A கூட்டணி தேர்தல் பரப்புரை கூட்டம்

image

I.N.D.I.A. கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை ஆதரித்து, நேற்று மாலை (ஏப்ரல்.10) கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.செல்வ பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில், சு.கல்யாணசுந்தரம் எம்.பி, செ.ராமலிங்கம் எம்.பி மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News April 11, 2024

அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு 

image

பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்புலியூர் சிறுகுடல், ஆகிய பகுதிகளில் இன்று சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசன் தேர்தல் பிரச்சாரத்தை ஈடுபட்டார். உடன் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் (ம) அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கழக நிர்வாகிகளுடன் பொது மக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தனர். 

News April 11, 2024

விருதுநகர் அருகே கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

image

விருதுநகர் அருகே நடுவப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி(63). இவர் தேநீர் அருந்துவதற்காக நேற்று எட்டூர் வட்டம் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கார் மோதியதில் முதியவர் ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வச்சகாரப்பட்டி காவல்துறையினர் கார் ஓட்டுநர் சண்முக சுப்பு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 11, 2024

இலுப்பூரில் விஏஓ-வை தாக்கி கைப்பேசி பறிப்பு

image

பூதகுடி கிராம நிா்வாக அலுவலா் லட்சுமி காந்தன் பணி நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் இலுப்பூா் கோட்டாட்சியரகம் சென்றுவிட்டு மீண்டும் இலுப்பூா்- விராலிமலை சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த 4 இளைஞா்கள் விஏஓ-வின் வாகனத்தை மறித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 11, 2024

வெறிநாய் கடித்து 11 பேருக்கு சிகிச்சை

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் இன்று வெறிநாய் கடித்ததில் 11 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 11, 2024

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

image

மதுரை தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் மா.வேலுமணி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களவை தோ்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்.,19 அன்று மதுரை மாவட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மீது 98652 22938, 82484 63905, 99410 12190, 78713 87668, 99445 17244 மற்றும் 0452 2530729 ஆகிய எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 11, 2024

108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

image

துவாக்குடி விஓசி நகரை சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி சித்திரா (26). இவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் பணியாளர்களான அவசர மருத்துவ உதவியாளர் ராஜ்குமார், அண்ணாதுரை ஆகியோரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News April 11, 2024

இஸ்லாமியரிடம் வாக்கு சேகரித்த திமுகவினர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருவண்ணைநல்லூர் சாலையில் உள்ள மசூதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு ஆதரவாக திமுக நகர செயலாளர் தலைமையில் திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில் உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினரும் செய்தியாளருமான ரமேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!