India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (25.04.2024) மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முழுவதும் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

கேரளாவில் நாளை (ஏப்.26) மக்களவைத் தேர்தல் நடைப் பெறுகிறது. இதையொட்டி, தமிழக எல்லையான, நம்பியார், குன்னூர், தாளூர், அய்யன் கொல்லி, எருமாடு ஆகிய இடங்களில் உள்ள 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. நாளை மறுநாள் (ஏப். 27) கடைகள் திறக்கப்படும். இதனால் மது பிரியர்கள் கோரஞ்சால், குந்தலாடி ஆகிய இடங்களில் உள்ள கடைகளை நாடி செல்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வெப்ப அலை வீசி வருவதால் (மஞ்சள்)அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் அதிக நீர்ச்சத்துள்ள பழவகைகள் உண்ண வேண்டும் இன்று நாமக்கல் மாவட்டம் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நம்மாழ்வார் திருவிழா வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில், பாரம்பரிய உணவுப் பொருள்கள் கொண்ட கண்காட்சியும் இடம்பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன் , சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி , நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் இரவில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் கடலூரில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சிதம்பரத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

தி.மலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 100. 4 டிகிரி பாரன்ஹீட், 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

பழனி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் காய்கள், பழங்கள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் எலுமிச்சை பழம் வரத்து குறைவாக உள்ளது. மக்கள் அதிகம் எலுமிச்சை பழம் வாங்குவதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையில் ஒரு பழம் ரூ. 8 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திரா பிரியதர்ஷினி, நித்யா, சுபாஷினி ஆகிய 3 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த குரூப்-1 தேர்வில் நித்யா உதவி ஆட்சியராகவும், இந்திரா பிரியதர்ஷினி வணிக வரித்துறையில் உதவி ஆணையராகவும், சுபாஷினி கூட்டுறவுத்துறையில் துணைப் பதிவாளராகவும் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் திருவள்ளூர், பெருமாள்பட்டு கிராமத்தில் தனியார் பள்ளியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் கலெக்டர் பிரபுசங்கர் இன்று (25/04/2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.