India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு முரணாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை எந்த அரசியல் கட்சியினரோ வேட்பாளரோ விநியோகிப்பது கண்டறியப்பட்டால், இது குறித்த தகவலினை மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04172-273190 / 273191 / 273192 / 273193 / 1950 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற (2024) தேர்தலை முன்னிட்டு கும்பகோணம் வட்டம் மற்றும் நகரம் மகாமக குளக்கரையில் 100% வாக்களிப்பதை உறுதி செய்வது தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் இன்று தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் எம்பிக்கு கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் குலசேகரம், அண்டூர், மலவிளை பகுதிகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றுகின்ற பிற மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலர்கள் தபால் வாக்கு அளிக்க ஏதுவாக படிவம் 12 பிற மாவட்டங்களுக்கு 1437 வாக்காளர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டது. இதில் 1290 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் மீதமுள்ள வாக்குகள் விரைந்து பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சிகள் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் இன்று (ஏப்-16) செய்து காட்டினார். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு ஏப்ரல் 19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களுடன் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக்கினை வெட்டி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் வாக்காளர்கள் பிறந்தநாள் கொண்டாடினார்கள்.

மக்களவை தேர்தல் முன்னிட்டு வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள வாக்குப்பதிவிற்கு தேவையான 33 வகையான பொருட்களை இன்று (ஏப்ரல் 16) வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேலூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, வட்டாட்சியர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் வேஸ்ட் என்கிறார் பாமக தலைவர் அன்புமணி; அதிமுகவிற்கு மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்ததால்தான் அன்புமணி எம்.பி. ஆனார். பாமக அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கும். தற்போது பதவி வேண்டுமென கூட்டணி அமைத்துள்ளார் என கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப்ரல் 21 ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, மே 1 ம் தேதி மே தினத்தை முன்னிட்டும் மாவட்டத்தில் அனைத்து அரசு மதுபான கடைகளும் அதனை ஒட்டி உள்ள பார்களும் தனியார் விடுதி பார்களும் மூடப்படும். மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியில் தனியாருக்கு கொடுத்த ஒப்பந்தங்களை ரத்து செய்து, குறிப்பிட்ட சமூக மக்களுக்கு, தூய்மை பணி மற்றும் கழிப்பிட ஒப்பந்தங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் கொடுங்கள் என்று எப்படி உத்தரவிடுவது? அது ஜனநாயகத்திற்கு எதிரானது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்
Sorry, no posts matched your criteria.