Tamilnadu

News April 25, 2024

சேலத்தில் பீர் விற்பனை 60% அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமான விற்பனையில் இருந்து 60% பீர் விற்பனை கூடியுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெயிலின் தாக்கம் குறையாததால் பீர் விற்பனை அதிகாரிக்கும் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 25, 2024

2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

image

ஊத்தங்கரை அடுத்த காட்டேரி பகுதியில் நேற்று மதியம் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் சந்திராபுரம் பகுதியை சார்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 25, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

image

அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திஷ்( 19). இவர் இன்று பைக்கில் தக்கோலம் கூட்ரோடு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்திஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சிறப்பு

image

கள்ளக்குறிச்சி, தென்பெண்ணை ஆற்றில் அருகில் உள்ள திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானது. இக்கோயிலின் சிறப்பாக பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில், மற்றொரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். இது நிலத்தை அளக்கும் கோலமாகும். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளது தனித்துவமானது.

News April 25, 2024

காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு கோடைப் பருவத்தில் உளுந்து, எள் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை சாகுபடி செய்வதற்கான கோடை சாகுபடி சிறப்பு திட்டமானது தற்போது வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மானியமில்லா இடுபொருட்களான நுண்ணூட்ட கலவைகள் மற்றும் நோய் தாக்குதலை தடுக்க பயன்படுத்தப்படும்  இடுபொருட்களை வேளாண்துறை மூலம் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

News April 25, 2024

தர்மபுரி அருகே விபத்து

image

தர்மபுரி: ரேக அள்ளி அண்ணாநகர் பகுதி சேர்ந்த எல்லம்மாள் 51. கடந்த 22ம் தேதி இரவு 10 மணிக்கு சாலை கடக்கும்போது பொம்மிடி பகுதியில் இருந்து வந்த மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த எல்லம்மாள் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரது மகள் மகேஸ்வரி இன்று பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 25, 2024

நியோமேக்ஸ் மோசடி: மேலும் 4 பேர் கைது

image

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே 30 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் கிளை நிறுவன இயக்குனர்களான சார்லஸ், இளையராஜா, சஞ்சீவ் குமார் உள்ளிட்ட 4 பேரை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

கன்னியாகுமரி: குளத்திற்குள் விழுந்த லாரி

image

இரணியலிருந்து நேற்று இரவு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு லாரியில் நைலான் கயிறு ஏற்றி சென்று கொண்டிருந்த போது ஆழ்வார் கோவில் பகுதியில் நான்கு வழிசாலை வளைவான இடத்தில் திரும்பும்போது லாரி ஒட்டுனரின் கட்டுபாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒட்டுனர் ஆனந்த் மற்றும் வினோத் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 

News April 25, 2024

பழமை வாய்ந்த திண்டல் முருகன் கோவில்

image

திண்டல் முருகன் கோவில், ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் வழியில் 60 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்குன்றில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. கொங்கு நாட்டு ஆலய அமைப்பில், தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாக இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்திருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

News April 25, 2024

நாமக்கல்: வரும் 30ல் இலவச பயிற்சி

image

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு, கோடைக்கால பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெறுகிறது கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 04286 266345, 266650, 7010580683, 9597746373, 9943008802 என்கிற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

error: Content is protected !!