India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிணற்றில் இன்று காலை சுடலைமணி, மகாராஜன் ஆகிய 2 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான அடகு கடையில் இன்று மதியம் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் பிரகாஷை கட்டி போட்டு விட்டு, சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அரங்கநாதன். லாரி ஓட்டுநரான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் அருகில் உள்ள பாசிமுத்தன் உடையில் மீன் பிடிக்க சென்றார். எதிர்பாரத விதமாக நீரில் மூழ்கினார். அவரை மீட்ட மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர் அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை போலீஸ் செக்போஸ்டில், தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி கீழக்கரை குடிமைப் பொருள் தாசில்தார் ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர், இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி – ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தை சோதனை செய்ததில், தெற்கு அந்தமான் போர்ட்பிளேரை சேர்ந்த சக்திவேல் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

2024 மக்களவை தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை
மறுநாள் (ஏப்.17) முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் மாதம் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேற்கண்ட 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறையை போல ஓட்டல்கள் பார்களும் இயங்காது என ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார்.

கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் முகிலன். இவர் B.Com படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஒரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டு பயந்து ஓட முயன்றார். அப்போது அவரை பிடித்து அடித்து உதைத்தனர். முகம், பின்னந்தலையில் இரத்த காயம் ஏற்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று (ஏப்.15) தொடங்கியது.
பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (ஏப். ,15) காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கமேஸ்வரர் சன்னதியில் உள்ள கொடிக்கம்பத்தில் நந்தி உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

நாகர்கோவில் அருகே சேவியர் காலணியை சேர்ந்தவர் சுமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த இவர்
பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் விஷ்ணுபுரம் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்போரூர் பேருராட்சி குப்பை கிடங்கில் இன்று (ஏப்ரல்-15) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பை கிடங்கு தீ விபத்து குறித்து தீயணைப்புதுறை அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் தொகுதியில் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் அதிமுக மற்றும் பாமக கட்சியின் இருந்து முக்கிய நிர்வாகிகள், இளைஞர்கள் எ.வ.கம்பன் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். தேர்தல் நேரத்தில் கட்சி மாறியதால், பாமக, அதிமுகவினரிடையே பெரும் குழப்பம் நீடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.