Tamilnadu

News March 31, 2024

ஒத்தினிப்பட்டி கிழவன் குளம் கண்மாயில் மீன் பிடி திருவிழா!

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒத்தினிப்பட்டி கிழவன் குளம் கண்மாயில் மீன் பிடி திருவிழா இன்று (மார்.31) நடைபெற்றது. இதில் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வலை, ஊத்தா போன்ற மீன்பிடி சாதனங்களுடன் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இதில் கட்லா, விரால், ஜிலேபி, கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை  அரை கிலோ முதல் 7 கிலோ வரை எடை கொண்ட மீன்களை அள்ளிச்சென்றனர் .

News March 31, 2024

காஞ்சிபுரம் தொகுதி: 11 போ் போட்டி

image

காஞ்சிபுரம் மக்களவை (தனி) தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் 6 போ் மற்றும் அரசியல் கட்சியினா் 5 போ் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா். க.செல்வம்-திமுக(உதயசூரியன்), பெரும்பாக்கம் இ.ராஜசேகா்-அதிமுக (இரட்டை இலை), வெ.ஜோதி வெங்கடேசன்-பாமக (மாம்பழம்), வி.சந்தோஷ்குமாா்-நாம் தமிழா் (மைக்), எஸ்.இளையராஜா-பகுஜன் சமாஜ் (யானை) மேற்கண்ட இவர்கள் அவர்களுடைய சின்னத்தில் போட்டியிடுகின்றனர்

News March 31, 2024

சேலத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்

image

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர் எடப்பாடி மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 2018 பேர் அதிகமாக உள்ளனர். 8,23,336 ஆண் வாக்காளர்களும், 8,25,354 பெண் வாக்காளர்களும், 221 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்காளர்கள் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளனர்.

News March 31, 2024

அரக்கோணம் 108 பால்குட ஊர்வலம் பக்தர்கள்

image

அரக்கோணம் அடுத்த கைனூர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் கோயிலில் 48 வது நாள் மண்டல பூஜை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் இன்று நடந்தது. ஊர் நாட்டாண்மைதாரர் நாதமுனி, நிர்வாகிகள் ஆறுமுகம் ,மூர்த்தி, வழக்கறிஞர் தினேஷ் ,மணி, குப்புசாமி ,கோதண்டன் ,அன்பு, குப்பன் ,முரளி முனிரத்தினம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் .

News March 31, 2024

நாமக்கல்: முதலமைச்சரை சந்தித்த நாமக்கல் வேட்பாளர்

image

இன்று ஈரோட்டில் நாமக்கல் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றாா். இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன், நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News March 31, 2024

காங்கிரஸ் தலைவருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

image

தஞ்சை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்ததிற்க்கு ஆதரவு திரட்டுவதற்காக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தஞ்சை வந்தார். அப்போது அவர் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரை சந்தித்து பேசினார். அண்ணாமலைக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என இருவரும் கூறினர்.

News March 31, 2024

வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

image

நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்தவர் ரஞ்சித் (30). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த் (30) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரஞ்சித்திடம் ரூ.500-யை பறித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து நேற்று நிஷாந்தை போலீசார் கைது செய்தனர்.

News March 31, 2024

சென்னையில் பிரதமர் மோடி 9ம் தேதி வருகை

image

ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். தென்சென்னையில் டாக்டர் தமிழிசை, மத்திய சென்னையில் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது. இந்த 2 தொகுதிகளுக்கும் பொதுவான இடத்தில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்கள். தென்சென்னைக்கு மேற்கு மாம்பலம், மத்திய சென்னைக்கு பாண்டி பஜார் ஆகியவற்றை இணைக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

News March 31, 2024

31 வேட்பாளர் அடங்கிய இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மொத்தம் 37 பேரில் 6 பேர் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். பின் 31 நபர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது. இதில் 31 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவிற்கு (1) என 32 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான ராஜ கோபால் சுங்கரா தெரிவித்துள்ளர்.

News March 31, 2024

விழுப்புரத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளா் இறுதிப் பட்டியல் சனிக்கிழமை நேற்று (மார்ச் 30) மாலை வெளியிடப்பட்டது. அதன்படி விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் விசிக, அதிமுக, பாமக, நாதக, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 17 பேர் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பழனி தெரிவித்தார்.

error: Content is protected !!