Tamilnadu

News April 22, 2024

வாக்குப்பெட்டியை பார்வையிட்ட அதிகாரி

image

உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், மக்களவைப் பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை தேர்தல் பொதுப்பார்வையாளர் மஞ்சித் சிங் பரார், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருந்தார்.

News April 21, 2024

தினகரனை சந்தித்த பேரூராட்சி தலைவர்

image

தேனியில் அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தேனி அருகே அல்லிநகரம் காவல் நிலையம் அருகில் தங்கி உள்ளார். இந்நிலையில் போடி அருகே மீனாட்சிபுரம் சேர்மன் S. திருப்பதி அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். பின்பு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசித்தார். சேர்மன் திருப்பதி ஓபிஎஸ் அணியினை சேர்ந்தவர் ஆவார்.

News April 21, 2024

தென்காசியில் இன்று 101.8 டிகிரி வெப்பம் பதிவு

image

தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து இன்றும் (ஏப்ரல் 21) காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இன்றைய அதிகபட்ச வெப்ப பதிவு 101.8 டிகிரியாக உயர்ந்தது. சாலைகளில் சென்றவர்கள் மட்டுமின்றி வீடுகளுக்குள் முடங்கி கிடந்தவர்களும் வெப்பம் காரணமாக அவதிப்பட்டனர். இரவிலும் புழுக்கம் உணரப்பட்டது.

News April 21, 2024

தஞ்சையில் அதிக வாக்குப்பதிவு

image

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 24 ஆயிரத்து 200 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 90 ஆயிரத்து 301 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 129 பேர் என மொத்தம் 15 லட்சத்து 14 ஆயிரத்து 630 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 24 ஆயிரத்து 949 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்கு அளித்துள்ளனர்.

News April 21, 2024

கடலூரில் இன்று இரவு ரோந்துப்பணி

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் மணிவண்ணன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் தனசேகர், நெய்வேலி காவல் ஆய்வாளர் இராஜராஜன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ஜவ்வாது ஹுசைன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

பெரம்பலூர் : பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை

image

பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்திகேஸ்வரர் மற்றும் ஈசனுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகள், வாசனை திரவியுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் ஈசன் எழுந்தருளி உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

News April 21, 2024

ஜோலார்பேட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்

image

கோயம்புத்தூர் – பருணி இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 06059 கோவையில் இருந்து ஏப்.23 ம்தேதி பகல் 11.50க்கு புறப்படுகிறது இதேபோல் வண்டி எண் 06060 பருணியில் இருந்து 26ஆம் தேதி இரவு 11.45க்கு புறப்படுகிறது. ஜூன் 28ம் தேதி வரை சிறப்பு ரயில் இயங்கும்.

News April 21, 2024

பழனி கோயிலுக்கு புதிய ஆம்புலன்ஸ்

image

பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலை மீது செல்லும் பக்தர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் ஆம்புலன்ஸ் வாகனம் இயக்கப்படுகிறது.

News April 21, 2024

காரைக்காலில் பாஐக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

காரைக்கால் மாவட்டத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக புதுச்சேரி நாடாளுமன்ற வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் ராஜசேகர், மாவட்ட தலைவர் முருகதாஸ், மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 21, 2024

சிவகங்கை: குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்

image

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அதிமுக சேவியர்தாஸ், பாஜக தேவநாதன், உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது குறித்து அதிமுகவினர் கூறுகையில் ”திமுக மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. சிலர் பிரிந்து சென்றாலும் எங்களது கட்சி வாக்குகள் சதவீதம் இதனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது வெற்றி பெறுவார் என்றனர்.

error: Content is protected !!