Tamilnadu

News April 2, 2024

மதுரைக்கு வருகை தரும் அமித்ஷா

image

மதுரைக்கு விமானம் மூலம் வரும் ஏப்.4ல் வருகை தரும் அமித்ஷா, தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். அன்று மாலை 6.00 மணிக்கு மதுரையில் பாஜக சார்பில் போட்டியிடும் இராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார். ஏப்.5ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2024

கள்ளக்குறிச்சி: மௌன மொழி நாடக நிகழ்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மக்களவைத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களின் மௌன நாடக நிகழ்வு நடைபெற்றது. இதில், ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

News April 2, 2024

திருச்சி: இனோவா கார், 5 பவுன் பரிசு!

image

திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோருக்கு இனோவா கார், தங்க செயின் பரிசு என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக வாக்குகள் பெற்றுத் தரும் நகர செயலாளருக்கு இனோவா காரும், வட்டச் செயலாளருக்கு 5 பவுன் நகையும் வழங்குவேன் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாக தகவல்.

News April 2, 2024

போளூர்: பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

image

போளூரில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று போளூர் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை செய்தார். இதில் ஏராளமான தேமுதிக மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News April 2, 2024

“மக்களுக்கும் எனக்குமான காதல் புனிதமானது”

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து, இன்று(ஏப்.2) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும்; தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமானது அல்ல; அதையும் தாண்டி புனிதமானது என பேசினார்.

News April 2, 2024

கடலூரில் ஆலோசனை கூட்டம்

image

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி கடலூர் திமுக கட்சியா அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரஸ்வதி வேலுச்சாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News April 2, 2024

முக்கிய ரயில்கள் சேவை ரத்து..!

image

மதுரை கோட்டப்பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 14 வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 06.25 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி – தூத்துக்குடி ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

News April 2, 2024

கமலஹாசன் பெரம்பலூரில் பிரச்சாரம்

image

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு அவர்களை ஆதரித்து இன்று (ஏப்ரல் 2 ) மாலை 7 மணி அளவில் பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்.

News April 2, 2024

திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.!

image

திருச்சி உறையூர் கல்லறை மேட்டு தெரு அருகில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் மதில் சுவர் கட்டப்படுவதை கண்டித்து, வீடு தோறும் கருப்பு கொடி ஏற்றி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம் என கல்லறை மேட்டு தெரு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 2, 2024

ELECTION: சந்தேகம் இருக்கா?

image

மக்களவைத் தேர்தல்-2024 ஏப்.19ம் தேதி, தமிழ்நாட்டி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் முழுமூச்சாக இறங்கியுள்ளனர். அதே போன்று தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளது. உங்களுக்கு தேர்தல் குறித்த சந்தேகம், உதவிகள் தேவைப்படின் ‘1950’ என்ற எண்ணுக்கும், சென்னை மாநகராட்சியின் ‘1913’ என்ற எண்ணுக்கும் அழைக்கலாம்.

error: Content is protected !!