Tamilnadu

News April 6, 2024

தஞ்சை பெரிய கோயிலில் கொடியேற்றம்

image

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டு சித்திரை விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
பஞ்சமூா்த்திகளுடன் சந்திரசேகரா் கோயிலுக்குள் புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். தொடர்ந்து பிரமாண்ட கொடிமரத்தில் நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

News April 6, 2024

சிறுபான்மையினர் விஷயத்தில் காங் – திமுக இரட்டை வேடம்

image

புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து முத்தியால்பேட்டை தொகுதியில் அதிமுக செயலாளர் அன்பழகன் பேசியதாவது, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக உள்ளிட்ட காங் கட்சிகள் முஸ்லீம், சிறுபான்மையினர் விஷயத்தில் இரட்டை வேடம் போடுவது தெளிவாக தெரிகிறது. இதையெல்லாம் உணர்ந்து பார்த்து மக்கள் அதிமுக வேட்பாளரான தமிழ்வேந்தனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

News April 6, 2024

பெரியகுளம் அருகே மருத்துவ முகாம்

image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகப்பட்டி வள்ளலார் சத்ய ஞான சபை தர்மச்சாலையில் இன்று கலிக்கம் சித்த மருத்துவ கண் சிகிச்சை சொட்டுநீர் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் ஏராளமான முதியோர்கள் கலந்து கொண்டு, கண்ணை பரிசோதித்து மருத்துவ சொட்டுநீர் செலுத்தி பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வள்ளலார் சத்ய ஞான சபை நிர்வாக குழு பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

News April 6, 2024

கலவரத்தை உருவாக்க நினைக்கிறார் டிடிவி

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “நாங்கள் எங்கெல்லாம் பிரச்சாரம் செய்கிறோமோ அங்கெல்லாம் அனுமதியின்றி டிடிவி தினகரன் வருகிறார். ஒரு கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என நினைக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

News April 6, 2024

ஓசூர்: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

image

ஓசூர் அருகே சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்
வாகனத்தில் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்த நிலையில், அவற்றில் 45 பெட்டிகளுக்கு மட்டுமே உரிய ஆவணங்கள் இருந்தன. நகையை கொண்டு வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அனைத்து நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News April 6, 2024

அண்ணாமலை மீது அதிமுகவினர் புகார்

image

கோவை தொட்டிபாளையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த சமயத்தில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை அதே நேரத்தில் எவ்வித அனுமதி பெறாமல் அதிமுகவிற்கு தேர்தல் பரப்புரை செய்ய வழங்கப்பட்ட நேரம் மற்றும் பகுதியில் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் கரும்பத்தம்பட்டி காவல் நிலையத்தில் இன்று (ஏப்ரல்.06) புகார் அளித்தார்.

News April 6, 2024

பூத் வாரியாக பாஜக வாக்கு சேகரிப்பு

image

கோத்தகிரியில் பாஜகவினர் பூத் வாரியாக மக்களவை வேட்பாளர் டாக்டர் எல்.முருகனுக்கு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று (ஏப். 6) 54 வது பூத்துக்கு உட்பட்ட தர்மோனா பகுதியில் கிளை தலைவர் நடராஜ் தலைமையில் வாக்கு சேகரித்தனர். கோத்தகிரி நகர தலைவர் ஹால்தொரை , பிரதீஷ், தியாகராஜ், விக்ரம், சத்திய சிவன், சம்பத் உடன் சென்றனர்.

News April 6, 2024

வேலூர் நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பு

image

மக்களவை தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் இன்று (ஏப்ரல் 6) வேலூர் நேதாஜி மார்க்கெட், லாங்குபஜார், மண்டி தெரு, கிருபானந்த வாரியார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

News April 6, 2024

தூத்துக்குடி பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை

image

தூத்துக்குடி அண்ணா நகர் மேற்கு பகுதியில் மாநகராட்சி சார்பில் அவசரகதியில் தார் சாலை அமைக்கும் பணி தற்போது துவங்கி உள்ளது. இங்கு பாதாள சாக்கடை அமைக்காமல் சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளதால் பின்பு பாதாள சாக்கடைக்கு மீண்டும் சாலையை உடைக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே பாதாள சாக்கடை அமைத்துவிட்டு சாலை பணிகளை துவங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 6, 2024

கலெக்டர் அறிவுறுத்தல்

image

ராமேஸ்வரம் நடராஜபுரம் குடியிருப்புப் பகுதி வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு வீட்டிலும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு மையங்களுக்குச் சென்று வாக்களித்து ஒவ்வொருவரும் தங்களது ஜனநாயக கடமையை நிலைநிறுத்த வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.

error: Content is protected !!