India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை, பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் தண்டீஸ்வரன், மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஏப்.,21 ஆம் தேதி, டிரஸ்ட் சார்பில் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காலை 7:00 மணி முதல் மீனாட்சி திருக்கல்யாண மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடைபெறும் எனவும் பக்தர்கள் தேவையான பொருட்கள் தர விரும்பினால் இன்று முதல் ஏப்ரல் 17 வரை பள்ளிக்கு வந்து தரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில், தெற்கு 4-ஆம் வீதி ஆஞ்சனேயர் கோயில், மேலராஜ வீதியிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில், குமரமலை பாலதண்டாயுதபாணி கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கடையம், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சித்திரைத் திருவிழாவான நேற்று பல்வேறு பிரிவுகளில் 17 பேருக்கு தோரணமலையான் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தன்னூத்து குமரன், மந்திரமூர்த்தி, செல்வக்குமார், பரமசிவன், கோபாலகிருஷ்ணன், மாதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தர்மபுரி, நல்லம்பள்ளி ஒன்றியம், அதியமான் கோட்டையில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு காலபைரவர் திருக்கோயிலில் நேற்று(ஏப்ரல் 14ஆம் தேதி) சித்திரை விஷூகனியை முன்னிட்டு மூலவருக்கு ராஜ அலங்காரம் நடைபெற்றது. திருக்கோயிலில் வருகை புரிந்த பக்தர்களுக்கு புது நெல்லில் வைத்து பூஜைக்கப்பட்ட நெற்படி காசுகள் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் கோட்டை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 13) முனீஸ்வரருக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

சிதம்பரம் ஆறுமுக நாவலர் இறகுபந்து விளையாட்டுக் குழும அங்கத்தினர் சார்பில் முதியோர், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு நேற்று (ஏப்,14) 70 மாணவ, மாணவிகள், முதியோர்களுக்கும் காலை சிற்றுண்டி மற்றும் அவர்களுக்கான துண்டு, காலணி, பிஸ்கெட், பழங்கள், குளியல் சோப், பல் துலக்கும் பிரஷ், வேட்டி,சட்டை, புடவை, டீ சர்ட் உள்பட மொத்தம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில். அதிமுக ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது. திமுக ஆட்சியில் அதற்கான காலத்தை நீடித்து தராததால் காலாவதியானது என்றார்.

போடி பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கா். இவரது மனைவி முத்துமாரி. ரவிசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முத்துமாரி அதனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிசங்கா் நேற்று முன் தினம் (ஏப்.13) விஷம் குடித்த நிலையில் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி நேற்று (ஏப்.14) உயிரிழந்தாா். இதுகுறித்து போடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கு 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 2222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வாக்காளா்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க 8 தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குச்சாவடி மையம் மற்றும் பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் 8 வாக்குச்சாவடி மையம் என 16 வாக்குசாவடி மையம் அமைக்கப்பட உள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் மதிமுக மாவட்ட செயலாளர் க. ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் பெ தங்கவேல், நகர கழக செயலாளர் இராம மனோகரன் ,ஒன்றிய கழக செயலாளர் காட்டுப்பிரிங்கியம் பி. சங்கர் மற்றும் குமார் இரா.சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.