India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வால்பாறையில் துணிக்கடை நடத்தி வருபவர் சுதீர். இவரது தங்கை மகன் ஷியாம். வால்பாறையில் உள்ள துணிக்கடை, உணவகங்களை நிர்வகித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் வால்பாறை அடுத்துள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.வடலூர் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் அங்கு போலீஸ் குவிப்பு.

சென்னையில், பிரதமர் பங்கேற்கும் ‘ரோடு ஷோ’ நடைபெறும் பாண்டிபஜார் பகுதி கடை வீதிகள் நிறைந்த பரபரப்பான இடமாகும். எனவே தியாகராய நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமா் மோடி தங்கும் கிண்டி கவர்னர் மாளிகை பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னையில் நாளை 22 ஆயிரம் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

சிங்கம்புணரி அருகே முறையூரை சேர்ந்தவர் கருப்பையா. கொத்தனாரான இவர், நேற்று விஷம் குடித்து புதுக்கோட்டை மாவட்டம், கல்லூரில் ராமையா என்பவர் தோட்டத்தில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டுசெல்லும் வழியிலேயே கருப்பையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை

திருச்சி ரயில்வே கோட்டை மேலாளர் அன்பழகன், நேற்று செய்தியாளர்களிடம், தெரிவித்தது .2023-24 ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டம் சரக்கு அனுப்புவது பயணிகள் அனுப்புவது உள்ளிட்டவைகளில் அதிக அளவு வருவாய் ஈட்டி உள்ளது. 2024 ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் 15.077 மில்லியன் டன்களுக்கு அனுப்பியதன் மூலம்,857. 04 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இல்லத்தில் நேற்று தலைவுடையார் கோவில் பத்து ஊராட்சியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர் அவர்களுக்கு அதிமுக சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சூடியூர் ரயில் நிலையங்கள் இடையே கீழப்பெருங்கரை ரயில் தண்டவாளத்துக்கு இடையே நேற்று (07/02024) 70 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர் அடிபட்டு கிடப்பதாக மானாமதுரை இருப்புபாதை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற சார்பு ஆய்வாளர் தனுஷ்கோடி தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

ஆண்டிபட்டியை சேர்ந்த அருண் நேற்று இரவு தீனதயாளன் என்பவருடன் ஜம்புலிபுத்தூருக்கு டூவிலரில் சென்று கொண்டிருந்தார். கள்ளர் விடுதி அருகே சென்ற போது எதிரே வந்த டூவீலர் மீது மோதியதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அருண் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில், 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச் சாவடிகள் மற்றும் 1,125 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் வாக்குச் சாவடிகளில் இணையதள வசதிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ஏற்படுத்தப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.