India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் அறிமுக கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள கலைஞர் திடலில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதைத்தொடர்ந்து தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் இன்று கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களைக்கட்டியுள்ள நிலையில், பெரம்பலூர் பாஜக வேட்பாளராக பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இந்நிலையில், ரூ.126 கோடி என் சொந்த நிதியில் இருந்து தொகுதிக்காக செலவு செய்துள்ளதாக கூறிய பாரிவேந்தர், மீண்டும் தன்னை தேர்ந்தெடுத்தால் 1200 மாணவர்களை எஸ்ஆர்மில் இலவசமாக படிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் விஜய் வசந்த் நாளை
(27.03.24) காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றார். இதில் காங்கிரஸ் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மக்கள் நீதி மையம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தடங்கம் ஊராட்சி, லப்பர்சி காலனி அருகே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (போ) பா. வெங்கடேஷ் தலைமையிலான குழு, குழாய் வழியாக தண்ணீரை பீச்சு அடித்து கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்காலில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் முன்னிட்டு 100% வாக்களிப்பு நடைபெற வலியுறுத்தி இன்று அரசு கூட்டுறவு பால் பாக்கெட்டில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைவரும் வாக்களிப்போம், நேர்மையாக வாக்களிப்போம் என்ற தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய அச்சிடப்பட்ட பால் பாக்கெட்டுகளை காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களோ அல்லது சம்பந்தப்பட்ட நபர்களோ 04546_261730 அல்லது 9363873078 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

அட்டியாவில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வட மாநில வாலிபர்கள் 2 பேர், 10 கிலோ அளவில் கஞ்சா கடத்திச் சென்று இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கஞ்சாவை எடுத்துக்கொண்டு பெங்களூர் நோக்கி பேருந்தில் செல்வதாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு போலீசார் கந்திலி அருகே 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தமிழக பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் மேல் எடுத்து செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் 100 கைத்தறிகள் அமைத்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயனடைய விரும்புவோர் www.loomworld.in என்ற இணையதளத்தில் வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் காவல் நிலைத்து உட்பட்ட பனையூர் கிராமத்தில் இன்று (மார்ச்-26) நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற பதினோராம் வகுப்பு படிக்கும் பிரவீன் மற்றும் முகமது முசாதிக் ஆகிய 2 பேர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடலை கைப்பற்றி செய்யூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.