India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரை சங்கிமங்கலத்தைச் சேர்ந்த 13 பேர் விளாத்திகுளம் அருகே உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். கீழஈரால் பகுதியில் சென்ற போது சுற்றுலா வேனின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 காயமடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்த 13 பேரும் எட்டயாபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பெங்களூருவை சேர்ந்த முத்துக்குமார்(47 ) என்பவர் நேற்று (மே 1) படிக்கட்டில் ஏறி சென்று கொண்டிருந்தார். 1200வது படிக்கட்டு ஏறி செல்லும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை மே 6-ம் தேதி முதல் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். மேலும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வணிகம் தடை செய்யப்படும் என கடலூர் கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலில் வெளியே செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்ததால், தற்போது மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு தனியார் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் இன்று (02.05.2024 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் துறை சார்ந்த அலுவலர்களும் உடனிருந்தனர்.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இன்று சேலம் கடைவீதி சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சாலையோர கடைகளில் விற்பனை சரிவர இல்லாததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் வெயில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளனர்.

வண்ணாரப்பேட்டை என்.என். கார்டன் பகுதியில் கே.ஜி.எஃப் என்ற பெயரில் விக்கி (எ) விக்னேஸ்வரன் என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் முன்பு பணிபுரிந்த ரிஸ்வான் என்ற ஊழியரை கடந்த மாதம் ஆட்களை வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கோவையில் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வடவள்ளி பகுதியில் யானைத்தந்தம் விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் சாய்பாபா காலனி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சாய்பாபா காலனியை சேர்ந்த விசாகன், நல்லாம்பாளையத்தை சேர்ந்த பிரிட்டோ என்பதும் தந்தத்தை விற்க முயன்றதும் தெரிந்தது. தொடர்ந்து இருவரை கைது செய்து தந்தத்தை பறிமுதல் செய்தனர்.

நீட் இளங்கலை மருத்துவர் கல்விக்கான நுழைவுத் தேர்வின் மூலம் எம்பிபிஎஸ், பிடிஎஸ், கால்நடை மருத்துவம் மற்றும் பிற மருத்துவம், பாராமெடிக்கல் படிப்புகளுக்கு நீட் இளங்கலை மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் மே 5ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை 3462 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.