India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோடை வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்துவரும் நிலையில், தமிழக அரசு பொது இடங்களில் பொதுமக்களுக்காக குடிநீர், ஓஆர்எஸ் பொடிகளை வழங்க உத்தரவிட்டது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு சேவைகளை பெற வரும் பொதுமக்களுக்கு உதவிகரமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர் மோர் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

திசையன்விளை அருகே உள்ள வெங்கட்ராயபுரம் கிராமத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 80 மாணவிகள் மட்டுமே தற்போது படிப்பதால் இந்த பள்ளியை நடப்பு கல்வி ஆண்டுடன் மூடுவதாக நிர்வாகம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று (ஏப்ரல் 29) கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, பள்ளியை தொடர்ந்து அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் பகுதியில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி நடைபெறுகிறது. இதனால் நாளை(ஏப்ரல்.30) ஒருநாள் அய்யனார் கோவில் பகுதி மீனாட்சிபுரம்,பி.பி. குளம், நரிமேடு, தல்லாகுளம், சொக்கிகுளம், கே.கே நகர், கற்பக நகர், லூர்து நகர், புதூர், ஆத்திகுளம், ரிசர்வ்லைன், வள்ளுவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

பள்ளிப்பட்டு (ம) சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் வாழை தோட்டம் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதியிலிருந்து திருமணம், சுப நிகழ்ச்சிகளுக்கு வாழைமரம், வாழை இலை, பழம் உள்ளிட்டவற்றை மொத்தமாக பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக வாழை செடிகள் காய்ந்து இலைகள் கருகி வருவதால் வாழைப்பழம், இலை ஆகியவற்றின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

ஊத்தங்கரை அருகே காமராஜர் நகரைச் சேர்ந்த சிவா-விஜயபிரியா தம்பதியரின் மகன் வினித் (10) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கையில் வைத்திருந்த ₹5 நாணயத்தை விழுங்கியுள்ளார். உடனே ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நாணயத்தை மருத்துவர்கள் இன்று லாவகமாக அகற்றி உயிரை காப்பாற்றினர். இதையடுத்து, மருத்துவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் மே 1ல் கிராமசபை கூட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்படும். ஆனால் தற்போதுவரை மே 1 கிராம சபை கூட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்காததால் கூட்டம் நடைபெறாது என தெரிகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வேலூர் மாவட்டத்தில் மே 1ல் கிராமசபை கூட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்படும். ஆனால் தற்போதுவரை மே 1 கிராம சபை கூட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்காததால் கூட்டம் நடைபெறாது என தெரிகிறது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகளை படைக்க பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் உள்ளது. இதில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான தேர்வு போட்டி நடைபெற உள்ளது. மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையம் 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என தேனி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஊட்டியில் இருந்து 70கி.மீ தொலைவில் உள்ளது. 688.59 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் 65 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இந்தியாவில் காணப்படும் பறவை இனங்களில் எட்டு சதவீதம் முதுமலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு புலி, யானை, சிறுத்தை, புள்ளிமான், குரைக்கும் மான் போன்ற விலங்குகள் இங்கு உள்ளன. இங்கு சில சாலைகளில் பயணத்தை மேற்கொள்ள சில நேரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

நீலகிரி எம்பி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் நேற்று மாலை ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது: கேமராக்கள் செயல் இழந்துவிட்டன. அதிக வெப்பம் காரணமாக சூடானதால் இந்த பிரச்சனை ஏற்பட்டது என தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது நம்பும்படியாக இல்லை, சரியான விளக்கம் கிடைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.