Tamilnadu

News August 23, 2025

மதுரை: வங்கியில் இருந்து பேசுவதாக நூதன மோசடி

image

மதுரை மாநகர் காவல்துறை சார்பாக எச்சரிக்கை பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி, KYC புதுப்பிப்பதற்காக உங்களுக்கு LINK அனுப்புவார்கள் அதை நம்ப வேண்டாம். உண்மையாக வங்கிகள் ஒரு போதும் தொலைப்பேசியில் KYC கேட்கமாட்டார்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். எனவே இது போன்ற அழைப்புகள் வந்தா 1930 அல்லது மதுரை சைபர் கிரைம் 0452 – 2340029 எண்ணுக்கு அழையுங்க…SHARE பண்ணுங்க.

News August 23, 2025

விழுப்புரம்: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

image

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து செப். 21க்குள் விண்ணப்பிக்கலம். செம்ம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. SHARE பண்ணுங்க.

News August 23, 2025

சேலம் விமான பயணிகளின் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்டம், காமலாபுரம் சேலம் விமான நிலையத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இன்று (ஆக.23) இயக்கப்படவிருந்த அலையன்ஸ் ஏர் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை சேலம் விமான நிலையம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

News August 23, 2025

சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

சென்னை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 23, 2025

சிவகங்கை வருவாய்த்துறையில் வேலை

image

சிவகங்கை வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் பணிக்கு மொத்தமாக 46 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் (<>லிங்க்<<>>) விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 24-08-2025 (நாளை வரை). 10ம் வகுப்பு முடித்த தகுதியான நபர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். (உள்ளூரிலேயே வேலை தவறவிடாதீர்கள் *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க)

News August 23, 2025

திண்டுக்கல்லில் மாவட்ட ஆய்வுக் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற செந்தில்குமார் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 23, 2025

கிணற்றில் மிதந்த சடலம் யார் என கண்டுபிடிப்பதில் தொய்வு

image

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே முள்ளன்விளை கிராமத்தின் காட்டு பகுதியில் கிணற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த உடல் யாருடையது? என்பதை கண்டறிவதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.

News August 23, 2025

தி.மலை முதலமைச்சர் கோப்பைக்கான தேதிகள் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான தேதிகளை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி இதில் (26-08-2025) முதல் (10-09-2025) வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் பல்வேறு பிரிவுகள் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவருக்கு சான்றிதழ் பதக்கம் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

News August 23, 2025

ராணிப்பேட்டை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ந் தேதி (28/08/2025) காலை 11 மணி முதல் மாலை 5 மணி நேர வரை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும். விவசாயிகள் தங்கள் பொது மற்றும் தனிநபர் பிரச்சினைகளை கூட்டத்தில் தெரிவித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News August 23, 2025

க.குறிச்சி: கள்ளச்சாராயம்காசியவர் கைது

image

கல்வராயன் மலை அத்திப்பாடி கிராம பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வெள்ளம் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட SP க்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அவரது தலைமையில் கரியலூர் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் அத்திப்பாடி சுற்றுவட்டார பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலை என்பவர் பதுக்கி வைத்திருந்த 2000 கிலோ வெள்ளம் பறிமுதல் செய்து கொட்டி அளித்ததுடன் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!