India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் வருவதும்,விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சாலை வரும் வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிவருகிறது.

பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சோந்தவா் கருப்புச்சாமி (85). இவா் கடந்த 1ஆம் தேதி வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனா். நேற்று அதே ஊரை சோந்த வெள்ளைச்சாமி தோட்டத்து கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் விசாரனையில் இறந்த நபர் கருப்புசாமி என தெரியவந்தது . இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று (ஏப்ரல் 5) இரவு சேலம் நோக்கிச் சென்ற மினி லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. திண்டிவனம் பகுதியில் இருந்து சேலத்திற்கு கிர்ணி பழங்களை ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டி அருகே சென்றபோது ஓட்டுநர் சதீஷ் (31) கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சிறிது நேரம் அச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

திருவாடானை தாலுகா எஸ்பி பட்டினம் அருகே உள்ள சோழகன்பேட்டை கிராமத்தில் ஓரியூர் செல்லும் சாலையில் உள்ள முனியய்யா கோவில் பகுதியில் முட்புதருக்குள் துர்நாற்றம் வீசி உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று (ஏப்.5) அங்கு சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டனர். தகவலறிந்த எஸ்பி பட்டினம் போலீசார் அழுகிய சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர் தொகுதியில் மொத்தம் 2785 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை ஆதரித்து நெல்லை சந்திப்பு சிந்துபுந்துறை பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு திறந்த ஜீப்பில் நின்றபடி இன்று காலை (ஏப்ரல் 6) வாக்குச் சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் பாளை திமுக எம்எல்ஏ அப்துல் வஹாப், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிராஜ் தலைமையிலான பறக்க படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே நடந்து வந்த நபர் கையில் வைத்திருந்த பையை சாலையில் வைத்து திடீரென ஓட்டம் பிடித்தனர். உடனடியாக பறக்கும் படை குழுவினர் அந்தப் பையை சோதனை செய்த போது அதில் 70 பாட்டில்கள் இருந்துள்ளது.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் 09.04.2024 அன்று காலை ஏழு மணியளவில், அருணை இன்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் ஆதார் அட்டை, பிறப்புச் சான்று, பாஸ்போர்ட் புகைப்படம் இரண்டு கொண்டுவர வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எத்திலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவியை பார்ப்பதற்காக கயத்தாறு அருக வடக்கு சுப்பிரமணியபுரத்திற்கு சென்ற போது அவரது மாமனார் குருசாமி உட்பட 3 பேர் இவரை தாக்கினர். இதில் காயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கயத்தாறு போலீஸார் குருசாமி உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி இராசிங்காபுரத்தை சேர்ந்த மூதாட்டி சிந்தாமணி என்பவரை 21.08.14 அன்று கொலை செய்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த சேதுபதி என்பவரை போடி தாலுகா போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்.5) குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்தார்.
Sorry, no posts matched your criteria.