India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் சிவகாசி சாலையில் இன்று ஆமத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, தனியார் உணவகம் அருகே அனுமதி இன்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக குமாரலிங்கபுரம் பகுதியைச் சார்ந்த சந்திரன் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழாயிரம்பண்ணை பாண்டியாபுரம் செல்லும் சாலையில் குடியிருப்பு அருகே குப்பைகளை கொட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு அப்பகுதியினர் குப்பைகளை கொட்டுகின்றனர்.ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குப்பைகளை அள்ளப்படாமல் சுகாதாரக்கேடு ஏற்பட்டு துர்நாற்றமும் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு மேல கிருஷ்ணன் கோவில் தெருவில் , குடிநீர் குழாய் தொட்டி அருகே பொது சாக்கடை உள்ளது. அதில் சாக்கடை நீர் தேங்கி அதிலிருந்து கழிவு நீர் வெளியேறி குடிநீர் குழாயில் கலந்து சாக்கடை நீருடன் கலந்து வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தென்காசியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (26.04.2024) காலை 11 மணிக்கு இசிஇ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்கள் பயன்பெறலாம் என தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை <

புதுக்கோட்டை, ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, சிறப்பு அலங்கார முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஏராளமான பெண்கள் ஆரத்தி குடங்களுடன் செல்ல அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன், தனியார் புதிய கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து புதிய கடை திறந்து வைத்தார். இதில் குடியாத்தம் நகராட்சி மன்ற தலைவர் சௌந்தர் ராஜன் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொள்வது குறித்து கலெக்டர் உமா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கால்நடை மருத்துவர்கள் சுகாதார அலுவலகம் மற்றும் கோழி பணியாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கோழி பண்ணைகளில் பறவை காய்ச்சலுக்கு இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் கோழி மட்டும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வலியுறுத்தப்பட்டன.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக புவி தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகிக்க புவி வடிவில் மனித சங்கிலி அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாணவ மாணவியரும் மனிதன் வாழ தகுந்த இந்த புவியை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்றும், மண்வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாகை மட்டுமின்றி திருவாரூர் மயிலாடுதுறை காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.