India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரி குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 3 லட்சத்து 45ஆயிரம் இருந்தது. அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்ப்பட்ட தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை நேற்று காலை புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பொதுமக்கள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.

நாகூர் பெருமாள் கீழவீதி கட்சி அலுவலகத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர திமுக செயலாளர் எம்.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு வெற்றிக்கு தீவிரமாக பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமகிரிப்பேட்டை, மூலக்காடு பகுதியில் அமைந்துள்ள இவென் மோர் புட்ஸில் சிறுதானியங்களை பதப்படுத்தி பல்வேறு விதமான மதிப்பு கூட்டு பொருட்களாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்வது மற்றும் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இங்கு பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி கிராமப்புற அனுபவ பயிற்சி மாணவிகளுக்கு உரிமையாளர் ஜனகன் செயல் விளக்கம் அளித்தார்.

கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் திருச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை அப்போலின் கிளாட்ராஜ் தலைமையிலும் பாதம் கழுவும் திருச்சடங்கு சிறப்புத் திருப்பலியுடன் நடைபெற்றது.

தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று(மார்ச் 28) அவர் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை மற்றும் நியூ காலனி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

சிவகங்கை மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024ஐ முன்னிட்டு, பொது தேர்தல் பார்வையாளர் ஹரிஷ், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் வி.திரிபாதி,I.R.S., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆகியோர் தேர்தல் தொடர்பாக உரிய பணிகளை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக நியமிக்கப்பட்டுள்ள நியமன அலுவலர்களுடன் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டனர்.

மைசூா் – சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களும் எந்த சிரமமும் இன்றி கோடையை கழிப்பர் , ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரணி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இன்று முதற்கட்ட பிரச்சாரமாக ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேதாஜிபுரம் ஊராட்சியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். உடன் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், அதிமுக அமைப்பு செயலாளர், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர அதிமுக செயலாளர்கள், பேரூர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் பல்வேறு அதிமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று திருச்சி வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள், விஜயபாஸ்கர், பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.