Tamilnadu

News April 29, 2024

திருச்சி:பீர் விற்பனை இரண்டு மடங்காக அதிகரிப்பு.

image

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருச்சி சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சர்வ சாதாரணமாக வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் மக்கள் குளிர்ச்சி தரும் பழங்களை வாங்கி சாப்பிடுகின்றனர், ஆனால் மது பிரியர்களோ ஜில் பீர்களை அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

News April 29, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் மயிலாடுதுறையில் உள்ள ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று முதல் துவங்கி வருகின்ற மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர் அல்லாதோர் இதில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; மரணம் 

image

அறந்தாங்கி அருகே கீழையூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்
லாரி டிரைவர்.நேற்று
இரவு 8 மணிக்கு குரும்பூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக சென்ற கார்
எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்தகாயம் அடைந்த வெங்கடேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2024

கடலூர்: சேலம் ரயில் கடலூர் வரை நீட்டிப்பு!

image

சேலத்திலிருந்து தினமும் புறப்பட்ட சேலம் – விருத்தாசலம் பாசஞ்சர் DEMU ரயில் (06122) கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை வரும் 2ஆம் தேதி முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது சேலத்திலிருந்து (மாலை 6.30) விருத்தாசலம், ஊத்தங்கால் மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி வழியாக கடலூர் துறைமுகம் சந்திப்பை வந்தடைகிறது. முன்பு இந்த ரயில் சேலம் – விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2024

கோவை : தனது உயிருக்கு ஆபத்து 

image

கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீ நிதி இன்று (ஏப்ரல்.29) மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதில், MY V3 ஆட்ஸ் என்ற நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். இதனை தொடர்ந்து MY V3 நிறுவனத்தினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்தார்.

News April 29, 2024

திருப்பூர் ஆட்சியரகத்தில் இலவச நீர்மோர்

image

கோடை வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்துவரும் நிலையில், தமிழக அரசு பொது இடங்களில் பொதுமக்களுக்காக குடிநீர், ஓஆர்எஸ் பொடிகளை வழங்க உத்தரவிட்டது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு சேவைகளை பெற வரும் பொதுமக்களுக்கு உதவிகரமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர் மோர் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

News April 29, 2024

நெல்லை அருகே மூடப்படும் பள்ளி: மாணவிகள் தவிப்பு

image

திசையன்விளை அருகே உள்ள வெங்கட்ராயபுரம் கிராமத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 80 மாணவிகள் மட்டுமே தற்போது படிப்பதால் இந்த பள்ளியை நடப்பு கல்வி ஆண்டுடன் மூடுவதாக நிர்வாகம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று (ஏப்ரல் 29) கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, பள்ளியை தொடர்ந்து அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

News April 29, 2024

இங்கெல்லாம் நாளை குடிநீர் நிறுத்தம்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் பகுதியில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி நடைபெறுகிறது. இதனால் நாளை(ஏப்ரல்.30) ஒருநாள் அய்யனார் கோவில் பகுதி மீனாட்சிபுரம்,பி.பி. குளம், நரிமேடு, தல்லாகுளம், சொக்கிகுளம், கே.கே நகர், கற்பக நகர், லூர்து நகர், புதூர், ஆத்திகுளம், ரிசர்வ்லைன், வள்ளுவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

News April 29, 2024

வெயில் காரணமாக வாழை இலைகள் விலை இரட்டிப்பு

image

பள்ளிப்பட்டு (ம) சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் வாழை தோட்டம் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதியிலிருந்து திருமணம், சுப நிகழ்ச்சிகளுக்கு வாழைமரம், வாழை இலை, பழம் உள்ளிட்டவற்றை மொத்தமாக பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக வாழை செடிகள் காய்ந்து இலைகள் கருகி வருவதால் வாழைப்பழம், இலை ஆகியவற்றின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

News April 29, 2024

கிருஷ்ணகிரி: சிறுவனின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்

image

ஊத்தங்கரை அருகே காமராஜர் நகரைச் சேர்ந்த சிவா-விஜயபிரியா தம்பதியரின் மகன் வினித் (10) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கையில் வைத்திருந்த ₹5 நாணயத்தை விழுங்கியுள்ளார். உடனே ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நாணயத்தை மருத்துவர்கள் இன்று லாவகமாக அகற்றி உயிரை காப்பாற்றினர். இதையடுத்து, மருத்துவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!