India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உரிமம் பெற்ற 177 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.96 லட்சத்து 34 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு ரூ.22 லட்சத்து 66 ஆயிரம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே கொக்கரணை கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. கட்டடத் தொழிலாளியான இவர் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து அச்சிறுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜுவை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று(மார்ச்.21) கைது செய்தனர்.

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி மலைக் கோவிலில் நாளை(மார்ச்.23) முதல் மார்ச்.26 வரை பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் இரவில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே சமயம் பக்தர்கள் தங்கரதம் இழுப்பதற்கும் அனுமதி கிடையாது. இன்று வழக்கம் போல் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வாணியம்பாடியைச் சேர்ந்த மருத்துவர் பசுபதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரூர், கடவூர் சீலமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பெரியசாமி. இவர் கடவூரில் அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பெரியசாமி நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கானத்தூர் ரெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன்(42) யோகா மாஸ்டர். இவரை கடந்த 13ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் அஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் (38), கஸ்துாரியை (35) விசாரித்ததில் இவர்கள் இருவரும் சேர்ந்து லோகநாதனை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிந்தது. இருவரையும் போலீசார் நேற்று(மார்ச்.21) கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் செய்யாறு தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சியினா் தோ்தல் விதிகளை மீறி கூட்டம் கூடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தி.மு.க வினர் 41 பேர்.அ.தி.மு.க 40 என மொத்தம் 81 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் அறிவிப்பை அடுத்து, இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன் கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கலை ஒட்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆனால் சுயேச்சை வேட்பாளர் உட்பட அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் 2வது நாளான நேற்றும் (மார்ச் 21) மனு தாக்கல் செய்யவில்லை.

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி சூளூர்பேட்டைக்கு பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண்ணூர் வழியாக தினமும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நாளையும், நாளை மறுநாளும் (மார்ச் 23, 24) ஆறு ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.