Tamilnadu

News April 7, 2024

நகையுடன் மாயமான பள்ளி மாணவி

image

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிக்கந்தர். இவரது 15 வயது மகள் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், இளைஞர் ஒருவரிடம் மாணவி போனில் பேசி வந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர். நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமி பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச் செயினுடன் திடீரென மாயமானார். இதையடுத்து நகையுடன் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தர தந்தை புகார் அளித்துள்ளார்.

News April 7, 2024

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா தொண்டமாங்கினம் அடுத்த கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி பழனியம்மாள் (36). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மதுவிற்ற பழனியம்மாள் மீது வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த ஏழு மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

News April 7, 2024

அரிசி உரிமையாளர்கள் சங்கத்துடன் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை

image

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட நெல் அரிசி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் ஆதரவு கேட்டு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News April 7, 2024

ஸ்ரீபெரும்புதூர்: தாயை தாக்கிய அண்ணன் கொலை!

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே மணணூர் பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர்(36), சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது 12 வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.5), தாய் ரெஜினாவை மது போதையில் தாக்கியுள்ளார். இது குறித்து பாலசந்தரின் சகோதரர் மோகனரங்கனுக்கு தெரிய வரவே கட்டையால் தாக்கியதில் பாலசந்தர் உயிரிழந்தார். போலீசார் மோகனை கைது செய்தனர்.

News April 7, 2024

நாமக்கல்: வாகனங்களை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்

image

நாடாளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா (7.4.24) நாமக்கல் – கரூர் மாவட்ட எல்லையில் உள்ள பரமத்தி வேலூரில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு சோதனை சாவடி வழியாக வருகை தந்த அனைத்து வாகனங்களை நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

News April 7, 2024

கடலூர் அருகே மகிழ்ந்த வேட்பாளர்

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் தங்கர்பச்சான், கடலூர் சட்டமன்ற தொகுதி சிங்கிரிகுடி பகுதியில் இன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி, விளையாடி மகிழ்ந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடன் பாமக கடலூர் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் பாமக நிர்வாகிகள் இருந்தனர்.

News April 7, 2024

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

image

கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றபோது கம்பம் பார்க் ரோடு உழவர் சந்தை ரவுண்டானாவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் விற்றுக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் அவரை சோதனையிட்டு அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

News April 7, 2024

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை நாமக்கல் வருகை

image

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும், கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை நாமக்கல்லில் பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் காலை 9 மணிக்கு நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள நான்கு தியேட்டர் முன்பு தொடங்கி பேருந்து நிலையம் வரையில் மக்களைச் சந்திக்கும் வகையில் திறந்த வாகனத்தில் நின்றபடி அவா் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

News April 7, 2024

நாமக்கல்: இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

image

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சித்திரம் பவுண்டேஷன் சேலம் கோபி மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ பரிசோதனை முகம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.இதில் வார்டு கவுன்சிலர் கேசவன் பாலு மோகன்தாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை பெற்று சென்றனர்.இந்நிகழ்வில் மரு.மாதேஸ்வரன் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஸ் அருள் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News April 7, 2024

கும்பகோணம்: இறைச்சிக்கு சென்ற இறந்த பசு! ஷாக்

image

கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் அருகே நேற்று(ஏப்.6) மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 சக்கர வாகனத்தில் இறந்து 2 நாளான பசு ஒன்றை, வைக்கோல் வைத்து மறைத்து எடுத்து சென்ற நிலையில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசாரின் தீவிர விசாரணையில், உணவகத்திற்கு இறைச்சிக்கு சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

error: Content is protected !!