Tamilnadu

News April 29, 2024

கரூர்: அதிகாரிகள் ஆய்வு

image

கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும் , மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. டிஎன்பிஎல் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகில்களும் , சுண்ணாம்பு துகில்களும் காற்றின் மூலம் பரவி வீடுகளில் விழுந்து அவதிப்படுவதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தது தொடர்பாக அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

News April 29, 2024

காந்தி கிராமத்தில் கல்வீச்சு சம்பவம்

image

கரூர் காந்திகிராமம் ஜி.ஆர்.நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற புலியூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை உதவி மேலாளர் வீட்டில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் பட்டப்பகலில், கல் வீசி தாக்குதல் நடத்தியதாக, புகாரில் பைனான்சியர் ரகுநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது ஐந்து பிரிவுகளில் பசுபதிபாளையம் போலீசார் ஏப்.28 ம் தேதி ஞாயிற்றுகிழமை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2024

துறைமுகத்தில் பல கோடி ஊழல் – ஐ என் டி யு சி

image

அகில இந்திய ஐஎன்டியூசி துணைத் தலைவர் கதிர்வேல் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் 2011 இல் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல் கொடுத்தது போல் கணக்கு காட்டி பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News April 29, 2024

புதிய ரயில்பாதை திட்டம் நிறுத்தி வைப்பு

image

ரயில்வே பயணிகளின் வசதிக்காக செய்யப்பட வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டமானது, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

News April 29, 2024

குடிநீர்த் திட்டம் சோதனை வெற்றி

image

மதுரையில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், 1295.76 கோடி செலவில் செயல்படுத்தப்படும், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த வாரம் முதல், மதுரையில் 100 வார்டு களுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் தொடங்கப்பட உள்ளது.

News April 29, 2024

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று எவிடன்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற கோரி நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கில் எவிடன்ஸ் கதிர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 29, 2024

திருப்பத்தூர்  எஸ்.பி. முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருந்த 155 குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மனம் திருந்தி நன்னடத்தையுடன் வாழ்க்கை நடத்தும் குற்றவாளிகளுக்கு அரசின் நிதியுதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிவித்துள்ளார். 

News April 29, 2024

பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி கிடையாது

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான மோயர்பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணாகுகை, பில்லர்ராக் ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்.29) வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் சென்று வரலாம். ஆனால் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

ட்ரோன் பறக்க தடை 

image

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் இன்று(ஏப்-28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்மபுரி தேர்தல் சம்மந்தமாக வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைத்துள்ள செட்டிகரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி அருகாமையில் சுற்றியுள்ள பகுதிகளில் 2 கி.மீட்டர் வரை ட்ரான் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அப்பகுதிகளில் எந்த வித ட்ரோன் பறக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் நாளை தீர்ப்பு

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவி. மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

error: Content is protected !!