India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்தவர் சந்தன மாரியம்மாள். இவரது கணவன் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட நேற்று இரவு சந்தன மாரியம்மாளை பாலமுருகன், அவரது உறவினர் காளிமுத்து ஆகியோர் வெட்டி கொலை செய்து காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏழு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட எஸ் பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கால பயிற்சி முகாம் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளியில் நாளை மறுதினம் (மே.7) முதல் மே 22 வரை நடைபெறுகிறது.
இதில் 21 வயதிற்குட்பட்டோர் ‘ஸ்டைகர் ‘ உடன் வந்து பங்கேற்கலாம். பயிற்சியின் இறுதியில் ஒற்றையர் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். விபரங்களுக்கு 97860 61985, 78457 89569 தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் ஆல்வின் செல்வகுமார் கேட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பலத்த சூறாவளிக் காற்றோடு மழை பெய்தது. சூறாவளிக் காற்றில் 1000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து முற்றிலும் சேதமானது. 1000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவவை அடைந்துள்ளனர்.

பள்ளப்பட்டி குடோன்களில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி முனியராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று மாம்பழம் மற்றும் வாழைப்பழ குடோன்களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சந்தைப்பேட்டை பகுதி பழக் குடோன்களில் மருந்து தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 40 கிலோ மாம்பழங்கள், 500 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்து உரக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

2024-25 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 7,8,9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் சேர மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 10,11 தேதிகளில் திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு முன் வரும் 8 ஆம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததின் எதிரொலியாக, அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று (மே.05) சுற்றுலா வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அதில் ஓட்டுநர்களின் அனுபவம், வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே அனுப்பி வருகின்றனர்.

மதுரை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களில் நகா்ப் பகுதிகளில், மிகையான பயன்பாடு காரணமாக மின்மாற்றிகளில் பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. சராசரியாக சுமாா் 15 நிமிஷம் முதல் 30 நிமிஷங்கள் வரை இந்த மின் தடை நீடிக்கிறது. கடந்த 15 நாள்களில் அதிகபட்சமாக திருமங்கலத்தில் கடந்த 2-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி முதல் 3.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கால்பந்து கழகம் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்ற நடைபெற்ற மாவட்ட அளவிலான ‘பி. டிவிஷன் பிரிவு கால்பந்து போட்டியில் கோத்தகிரி ரிவர்சைடு கால்பந்து அணி மற்றும் கூடலூர் பிதர்காடு கால் பந்து அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிதர்காடு கால் பந்து அணி 2-0 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல் துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் நேற்று அவரை தேனியில் வைத்து கோவை போலீசார் கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கோவை ஜே.எம்.1 வது நீதிமன்றத்தில் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.