India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை மத்தியில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில், 1666 ஆம் ஆண்டுக்கும் முன்புள்ளது. இக்கோவிலின் கோபுரம் 7913 அடி உயரம் கொண்டது. தங்க ரதத்தில் அமர்ந்திருக்கும் விநாயகரும், தேக்கு மரத்தால் மட்டுமே செய்யப்பட்ட தேரும் பக்தர்கள் அளித்த நன்கொடையில் உருவாக்கப்பட்டது. இந்த தேரில் 7.5கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் தமிழ் கட்டடக்கலை பாணியில் வண்ணமயமாக இருப்பது சிறப்பானது.

விருதுநகர் அருகே இளங்கோவன் தெரு பகுதியில் இன்று கிழக்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சேதுராமன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சேதுராமன் என்பவரை கைது செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அவரிடம் இருந்த 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அலங்காநல்லூரை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த வாரம் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அதை ஊரைச் சேர்ந்த பிரவீன்குமார் (25), என்பவர் பள்ளி சிறுமியை கடத்தி அவரது நண்பர் அறையில் 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் நேற்று இரவு புகார் அளித்துள்ளார். பிரவீன்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரமக்குடியில் அதிமுக சார்பில் இன்று பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட ஜெயபெருமாள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் இன்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை, பஞ்சாயத்து ஏரி குளங்களையும், தூர்வாரி தடுப்பணைகளை புனரமைக்கப்பட வேண்டும். இலவச விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் சுந்தரபாண்டியபுரம் பேரூர், குற்றாலம் பேரூர் கழகம் ஆகிய பகுதிகளில் இன்று கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது
தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான செல்வ மோகன் தாஸ் பாண்டியன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து நீர் மோர், தர்பூசணி, லெமன் ஜுஸ், ஆகியவற்றை வழங்கினார்.

புதுக்கோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கினங்க கோடையில் மக்களின் தாகத்தை தீர்க்க அறுசுவை நிரம்பிய பழங்களுடன் கூடிய நீர், மோர் பந்தலை இன்று முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் திரளான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சென்னை மாநகராட்சி சார்பில், வெப்ப அலைகள் குறித்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “வணக்கம் சென்னை வாசிகளே!, உங்களுக்கு தாகமாக இருக்கிறதா? அப்படியென்றால், உங்கள் உடல் வெப்பநிலையை சமப்படுத்த வேண்டும் என்று பொருள்; உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள்: வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி வளர்ப்பு யானைகள் முகாம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதாலும், கோழிக்கமுத்தி முகாம் அருகே பாகங்களுக்கு வீடு கட்டும் பணி நடைபெறுவதால் முகாமில் உள்ள 20 யானைகளை வரகளையாறு, மானாம்பள்ளி மற்றும் சின்னாறு வனப்பகுதிகளுக்கு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கீழவளவை சேர்ந்த நவீன்குமார்(26). கடந்த வாரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனது காரினுள் இருந்த போது, ஒரு கும்பல் அவர் கார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசியது. இதில் அவர் காயம் அடைந்தார். போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், இன்று கீழவளவு அசோக்(29), அடைஞ்சன் கண்மாய்பட்டி கார்த்திக்(27), மேலூர் பாக்யராஜ் (37), சிவகங்கை மாவட்டம் கட்டானிபட்டி ராஜபிரபு(24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.