India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குலசேகரப்பட்டினத்தை சேர்ந்தவர் மாதேஷ் .நேற்று இவர் தனது நண்பர் விஜய்யுடன் இருசக்கர வாகனத்தில் பரமன்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது பைக் மோதியதில் மாதேஷ் சம்பவ இடத்திலே பலியானார். விஜய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறையை அடுத்த எலையாம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (58). இவர் சேலம் ரயில்வேயில் சுமைத்தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பெருந்துறை அருகே ஓலப்பாளையம் பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த கார் லோகநாதன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கசாவடியில் கட்டணம் உயரும் என மத்திய நெடுஞ்சாலைதுறை ஆணையம் தெரிவித்திருந்தது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி மற்றும் ஆத்தூர் சுங்கசாவடியில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கட்டணம் உயரும் என சுங்கசாவடி நிர்வாகம் தரப்பில் இன்று (ஏப்ரல்-1) தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருக்கல்யாணத்தை காண, தரிசன டிக்கெட் பெறுவதற்கான ஆன்லைன் பதிவு வரும் (09.04.24) அன்று தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புத்தானத்தம் மேற்கு தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடத்திட போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடந்த பேச்சு வார்த்தை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

கடலூரில் நேற்று அமைச்சர் உதயநிதி திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்காக மஞ்சக்குப்பம், பாரதி சாலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் கட்சி கொடி, பேனர்களை அதிக அளவில் வைத்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார், கட்சி கொடி, பேனர்களை அதிரடியாக அகற்றினர். இதனால் திமுகவினரிடையே பரபரப்பு நிலவியது.

ஆனைமலை தாலுகா பகுதியில் இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்ந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இளநீர் வரத்து தொடர்ந்து குறைவாக உள்ளதால், குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வாரத்தை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 36 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு டன் இளநீரின் விலை ரூ.14000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளா்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவின உச்சவரம்பு ரூ.
95 லட்சம் என்பதால் அந்தத் தொகைக்குள் செலவினங்களை வரைமுறைப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதன் காரணமாக மாவட்டம் முழுவதும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காங்கேயம் சாலையில் நடைபெற்ற சோதனையின் போது செல்வக்குமார் என்பவரது நான்கு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 53,440 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 1) காலை 8 மணி முதல் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த ஜீப்பில் சென்று அவர் பொது மக்களிடம் பல்வேறு வாக்குகளை அளித்து வாக்கு சேகரித்தார், அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.