Tamilnadu

News April 10, 2024

அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

image

இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் அதிமுக சிதம்பரம் தொகுதி வேட்பாளர் மா. சந்திரகாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாவட்ட கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் தெய்வமணி ரமேஷ், ஜெயப்பிரகாஷ், சதீஷ், காமராஜ், மணிகண்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..

News April 10, 2024

கட்சி கொடிகளை அகற்றிய தேர்தல் பறக்கும் படையினர்

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொழாவூர் , பெரணம்பாக்கம் , ஆத்துரை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அகற்றப்படாமல் இருந்த கட்சிக் கொடிகளை தேர்தல் பறக்கும் படையினர் முனியப்பன் தலைமையிலான குழுவினர் அகற்றினர். இந்நிகழ்வின் போது தலைமை காவலர் மோகனா, காவலர்கள் அனுசுயா பிரசாந்த் ஒளிப்பதிவாளர் சேட்டு மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News April 10, 2024

வேளாண்பணி அனுபவ திட்ட மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு

image

நத்தம் அருகேயுள்ள ஆவிச்சிபட்டியில் பெரியகுளம் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களின் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும் ஜனநாயகக் கடமையை வாக்களித்து நிலைநாட்டிடவும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

News April 10, 2024

திருப்பத்தூர்: விசில் தாத்தா மரணம்

image

வாணியம்பாடி அருகே வளையம்பட்டு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த விசில் தாத்தா பாபு (89)
89 வயதிலும் தசைகள் தளர்ந்தாலும் , தன்னம்பிக்கை சற்றும் தளராமல், மன உறுதியோடு சுறுசுறுப்பாக வாணியம்பாடி பகுதியில் முழுவதும் மிதிவண்டியில் தனது வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

News April 9, 2024

பிரதமரின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்.

image

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அன்னூர்,கரியாம்பாளையம், காரமடை வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம். நீலகிரியில் இருந்து வரும் வாகனங்கள் ஓடந்துறை ராமசாமி நகர், சிறுமுகை சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

ஆடுதுறை ரயில்வே கேட்  நாளை மூடல்

image

கும்பகோணம் அடுத்த ஆடுதுறை- ஆவணியாபுரம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மற்றும் தரங்கம்பாடி செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் நாளை (ஏப்ரல்10) காலை 8: 30 மணி முதல் மாலை 6: 00 மணி வரை நடைபெற இருப்பதால் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். ஆகவே, ஆடுதுறையிலிருந்து ஆவணியாபுரம் மற்றும் தரங்கம்பாடி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் செல்லவும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

News April 9, 2024

புதுகை சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பு

image

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தொண்டைமான் ஊரணி பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் துரை வைகோ அவர்களை ஆதரித்து தீப்பெட்டி சின்னத்தில் புதுகை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வின்போது உடன் திமுக மாவட்ட துணைச் செயலாளர் SS கருப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.

News April 9, 2024

குமரி மாவட்டத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை

image

முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினம் ஏப்ரல்-11 என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பிறை காணும் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இந்த நாள் மாறுவது வழக்கம். இந்த வகையில் கேரள மாநிலம் பொன்னானியில் ஷவ்வால் பிறை இன்று வானில் தென்பட்டது. இதை முன்னிட்டு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை (ஏப்ரல்-10) கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

சிதம்பரம் திருமாவளவன் வீட்டில் ஐடி ரெய்டு

image

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் திமுக கூட்டணியில் போட்டியிடவுள்ளனர்.பானை சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிதம்பரம் புற வழி சாலையில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் வீட்டில் இன்று இரவு ஐடி ரெய்டு 45 நிமிடங்கள் நடந்ததில் எதுவும் கிடைக்கவில்லை என வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

News April 9, 2024

வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி

image

தி.மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (09.04.2024) ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!