India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனிப்படை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னாங்கண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன்
என்பவர் மளிகை கடையில்
புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்
சிவசுப்பிரமணியனை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூரை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவரது மனைவி முருக ஜோதி(29). குடும்ப பிரச்னை காரணமாக முருக ஜோதி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று(மார்ச் 28) வீட்டில் தூக்கிட்டு தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (மார்ச் 30) தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக முதல்வர் இன்று சேலம் வருகிறார். முதல்வர் வருகையொட்டி இன்று மற்றும் நாளை இரு நாட்களுக்கு சேலத்தில் டிரோன்கள் பறக்க தடை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைதளமான வாட்சப் மற்றும் மெஸ்சேன்ஜர் பக்கங்களில அரசு உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை அதிகாரிகளின் படங்களை (profile picture) ஆக வைத்து ஆன்லைன் மோசடி நடந்து வருகிறது. குற்றவாளிகள் அதிகாரிகள் போல பேசி பணம் கேட்டு ஏமாற்றி வருகின்றனர். எனவே பொதுமக்கள் கவனமுடன் சமூக வலைதளங்களை பயன்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரடியாகவும், கைப்பேசி வாயிலாகவும் புகாா் தெரிவிக்கலாம். பொது பார்வையாளர்கள் சுனில்குமாா் – 93639 73902, சத்யத்ஜித் நாயக் – 74183 42803, செலவின பாா்வையாளா்கள் சிவசங்கா்யாதவ் – 93639 81375, மேவாராம் ஓலா – 93639 84150 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

செய்யார் வெம்பாக்கம் அருகே உள்ள கரந்தை கிராமத்தில் இயங்கும் கல்குவாரியில் கடந்த 26 ஆம் தேதி கரந்தை கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன், வல்லரசு, யுவராஜ் ஆகியோர் கல்குவாரியில் புகுந்து லாரியின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை சூறையாடினர்.
நேற்று(மார்ச்.28) அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த தூசி போலீசார் வல்லரசு, யுவராஜ் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து தலைமறைவான ஜெகதீசனை தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை தொடர்ந்து 10 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின் வெட்டால் பொதுமக்கள் மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மின் ஊழியர்கள் இரவு 11 மணிக்கு மேல் மின் இணைப்பை சரி செய்தனர்.

பழனி முருகன் கோவிலில் தங்க தேரோட்டம் நேற்று(மார்ச்.28) நடைபெற்றது. சின்னகுமாரர் தங்கத்தேரில் எழுந்தருளி மலை மீது வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த சில நாட்களாக தங்கத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்க தேரோட்டம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.

இரும்பாளியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் நேற்று மார்ச் 28-ந்தேதி மாலை திடிரென தீ பிடித்தது. பின்னர் மலமலவென பிடித்த தீயினால் வைக்கோல் போர் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் போராடி தீயை அணைத்தனர்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வருகிற (ஏப்ரல்) 2-ந் தேதி காலை 6.30 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீச்சல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதில் 12 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சிக்கு ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.