Tamilnadu

News March 29, 2024

திண்டுக்கல் அருகே குவிந்த பக்தர்கள்

image

பழனி முருகன் கோவிலில் தங்க தேரோட்டம் நேற்று(மார்ச்.28) நடைபெற்றது. சின்னகுமாரர் தங்கத்தேரில் எழுந்தருளி மலை மீது வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த சில நாட்களாக தங்கத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்க தேரோட்டம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.

News March 29, 2024

இரும்பாளியில் வைக்கோல் போர் தீயில் நாசமானது

image

இரும்பாளியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் நேற்று மார்ச் 28-ந்தேதி மாலை திடிரென தீ பிடித்தது. பின்னர் மலமலவென பிடித்த தீயினால் வைக்கோல் போர் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் தீயணைப்பு  நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் போராடி தீயை அணைத்தனர்

News March 29, 2024

கடலூரில் நீச்சல் பயிற்சிக்கு மாணவர்களுக்கு அழைப்பு

image

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வருகிற (ஏப்ரல்) 2-ந் தேதி காலை 6.30 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீச்சல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதில் 12 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சிக்கு ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

அசோக் நகரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபமாகவே பள்ளி மற்றும் கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

News March 29, 2024

20 வேட்புமனு நிராகரிப்பு

image

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., பாஜக, நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 21 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் உரிய ஆவணம் இல்லாதது, முறையாக படிவம் பூர்த்தி செய்யாத 20 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News March 29, 2024

தேர்தல் புகார்: அதிகாரிகள் எண்கள் வெளியீடு

image

மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, திருநெல்வேலியில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சோனாலி பென்ஷோ வயங்கங்கர் 94899 63626, பங்கஜ் நைன் 9489 963739, காசி சுஹைல் அனீஸ் 94899 63627 என்ற எண்ணை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் நேற்று(மார்ச் 28) தெரிவித்துள்ளது.

News March 29, 2024

மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தேர்தல் விதிமுறைகள் குறித்து புகார் அளிக்க 8925533710 மற்றும் 8925533810 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தேர்தல் விதிமுறைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் மேற்கண்ட என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், எனக் கூறப்பட்டுள்ளது.

News March 29, 2024

வேலூர்: 2 லட்சம் பணம் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் குமார் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து காட்பாடி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

News March 29, 2024

கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார் அப்போது அவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய நாடாளுமன்றத்தில் பேசக்கூடியவர் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

News March 29, 2024

கலவை அருகே எஸ்பி ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளான குப்பிடிசாத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சொறையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வாழைப்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாலி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய மையங்களில் மாவட்ட எஸ்பி கிரண் சுருதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!