India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புனித சூசையப்பர் கோவில் திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் தினந்தோறும் சூசையப்பர் ஆலயத்திற்கு தரிசனத்திற்காக நூற்றுக்கணக்கான இறை மக்கள் சூசையப்பர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று நற்கருணை பவனி விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த வலங்கைமான் சந்திரசேகரபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த கலியபெருமாள் மகன் கார்த்திகேயன் (40) என்பவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்த 22 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை வலங்கைமான் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் கைப்பற்றினர்.

ஆரணி காந்தி நகர் மாதா கோயில் எதிரில் பால் விற்பனை கடைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் பூபாலன் என்பவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் பட்டப் பகலிலேயே திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

கேரளா மாநிலம் புதுவேலி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(47). இவர் திருச்சி துவாக்குடியில் இருந்து காற்றாலை உபகரணங்களை லாரியில் ஏற்றிக் கொண்டு இன்று மேலூர் நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டியில் உள்ள சாலையோர ஓய்விடத்தில் லாரியை நிறுத்தி விட்டு படுத்தார். அப்போது வெயிலின் தாக்கத்தால் வலிப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் முஃபீதே ஆம் நிதியுதவி துவக்கப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடியில் இருந்து சுமார் 250 ஹாஜிகள் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் 14வது வார்டில் அமைந்துள்ள அனதீஸ்வரன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று மாலை 6 மணி அளவில் திருக்கோவிலில் நடைபெற்றது முன்பாக நந்தி பகவானுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளில் அபிஷேகம் செய்தனர். பின்பு அனதீஸ்வர்க்கு பெருமான் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு தீபாரணை காண்பித்து திருக்கோவிலில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நாளை(மே.7) முதல் 30.06.2024 வரை இ பாஸ் பதிவு செய்து வரவேண்டும். <

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே கோடை காலத்தில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நேற்று புதியதாக அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை இன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர் உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ மணிகண்ணன் வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (மே.5) மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் இ-பாஸ் பெறுவதற்கு epass.tnega.org என்ற இணையதள முகவரியில் மே 6ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். qR code பயன்படுத்தலாம். இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.