India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகப்பட்டினம் மாவட்டம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அவர்கள் இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா . பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் கோட்டாட்சியர் கோ. அரங்கநாதன் ஆகியோர் உள்ளனர்.

தேனி அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் தினமும் மனைவியுடன் சண்டையிட்டு வந்தார். அதை அவரது மகன்கள் தட்டிக் கேட்டபோது, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி வந்தார். 25ம் தேதி மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர் விஷமருந்தி விட்டேன் என கூறி மயங்கினார். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கட்சியின் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரம் அறிமுக கூட்டம் தேவகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தலைமையிலும், முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாங்குடி. கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு காவல்துறை தேர்தல் பார்வையாளராக, ராம கிருஷ்ண ஸ்வரண்கர் ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான ராம கிருஷ்ண ஸ்வரண்கர் இன்று முதல் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு பணி ஆய்வுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீ குமார்
தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ் பழனி நாடாரிடம் வாழ்த்து பெற்றார்.அப்போது அவர்களுடன் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன்,நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் உள்ளிட்ட பலர் இருந்தனர்

புதுவை நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி அணியை வெற்றி பெறச் செய்வோம் என சிபிஎம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார துவக்க பொதுக்கூட்டம் சாரம் ஜீவானந்தம் சிலை அருகில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூ கட்சியின் மாநில செயலாளர் சலீம், காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி, தி.க வீரமணி (ம) ராமகிருஷ்ணன் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.

தி.மலையில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக நேற்று வேங்கிக்கால் ஊராட்சி ஓம் சக்தி நகரில் உள்ள மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று மாற்றுத்திறனாளி நபருக்கு பழ கூடை கொடுத்து 12-D படிவத்தினை வழங்கினார்.

நீலகிரி, கூடலூர், தோட்டமூலா, ஏலுமரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர் நேற்று (மார்ச் 26) காலை 8.20 மணிக்கு மாரடைப்பு காரணமாக கூடலூர் GTMO மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என நீலகிரி காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் இவரது இறப்பு பற்றி பொய்யான தகவலை வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

நாட்றம்பள்ளி தாலுகா கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய கசிநாயகன்பட்டியை அடுத்த முருகப்ப நகரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. வேத பண்டிதர்களால் யாக சாலை அமைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விழாக்குழுவினர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 26) திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார். அப்போது கட்டுக்கடங்காத தொண்டர்கள் கூட்டம் இருந்தது.
Sorry, no posts matched your criteria.