Tamilnadu

News April 16, 2024

சேலம்: பதற்றமான இடத்தில் பலத்த பாதுகாப்பு

image

சேலம் மற்றும் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 12 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலத்தில் இருந்து ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News April 16, 2024

ஈரோடு: அனைத்தும் தயார்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் 146 மண்டலங்களில் 1,688 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 15.38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிக்காக 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3 ஆயிரத்து 896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

தூத்துக்குடி அருகே 7 பேர் கைது

image

தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் ஆதித்யா, அஜய். இவர்கள் நேற்று முன்தினம் அருண்குமார் என்பவருடன் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் அருண்குமார் உட்பட ஏழு பேர் அரிவாளால் ஆதித்யா, அஜய் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

News April 16, 2024

தி.மலை அருகே விபத்து; பலி

image

போளூர் அடுத்த கேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவர் உடல் நலக்குறைவால் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது, தச்சாம்பாடி பேருந்து நிலையம் அருகே குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

News April 16, 2024

திருப்பத்தூர்: பாமக நிர்வாகி மர்ம மரணம்

image

புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன்.  பாமக ஒன்றிய நிர்வாகியாகவும் இருந்தார்.  திருப்பத்தூரில் இருந்து புதுக்கோட்டை கிராமத்துக்கு பைக்கில் சென்றபோது சிவராஜ் பேட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News April 16, 2024

செங்கல்பட்டு: வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை

image

மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி வண்டலூர் பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக ஏப்ரல் 19ஆம் தேதியில் வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2024

வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை

image

மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி வண்டலூர் பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக ஏப்ரல் 19ஆம் தேதியில் வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2024

கோவை: பள்ளிகளில் குழந்தை காப்பகங்கள்

image

கோவை மாவட்டத்தில் 5 வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள பள்ளிகளில் குழந்தை காப்பகங்கள் அமைக்க (ஏப்ரல். 16) ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 5 வாக்குச்சாவடிக்கு மேல் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுடன் வரும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தன்னார்வலர்கள் மற்றும் உதவியாளர்களுடன் கூடிய குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

News April 16, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மாலை 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2024

கடலூரில் வரும் 22ம் தேதி முதல்

image

கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீட்டில் எல்கேஜி சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பள்ளி கல்வித்துறையின் இணைய தளத்தில் வரும் 22ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!