India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் யோகா வகுப்புகள் நடைபெறவுள்ளது. மே 1 முதல் மதுரை தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6:15 மணி முதல் 7 மணி வரையிலும், குழந்தைகள், பெண்களுக்கு தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரையிலும் வகுப்பு நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு 94875-37339 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலை எப்பொழுதும் சம சீதோஷ்ண நிலை இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று காலை முதலே வரத் தொடங்கியுள்ளனர். சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மணிமண்டபத்திற்கு சுற்றுலா படகில் சென்றும் கடலில் குளித்தும் மகிழ்ந்தனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருமங்கலம் ஒன்றியம் T.புதுகுப்பம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மனுக்கு நேற்று இரவு கல்யாண வைபோகம் திருமணம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் திருக்கல்யாண கோலத்தை கண்டு களித்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

வேலூர் மீன் மார்க்கெட்டில் இன்று (ஏப்ரல் 28) மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ 1600, சிறிய வஞ்சரம் மீன் ரூ 800, இறால் ரூ 450 முதல் 600, கட்லா ரூ 160, நண்டு ரூ 400 முதல் 450, மத்தி ரூ 140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.

மண்டபம் முகாம் உமையாள்புரத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரி. இவரது குடிசை வீட்டில் நேற்று நள்ளிரவு மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்த தகவலறிந்த மண்டபம் பேரூராட்சித் தலைவர் ராஜா, முனீஸ்வரிக்கு நிவாரணத் தொகை வழங்கினார். கவுன்சிலர்கள் சம்பத் ராஜா, கலாவதி ஆகியோர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.