Tamilnadu

News April 9, 2024

திமுக வேட்பாளரை ஆதரித்து ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரம்

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட தேரடி பகுதியில் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைமை கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், குடியாத்தம் எம்எல்ஏ அமலு, நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 9, 2024

ரூ.3,31 கோடி பறிமுதல்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரொக்கப்பணம் , தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், மதுபானங்கள் என மொத்தம் ரூ.3,31 கோடி பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ரூ.8.77 லட்சம் மதிப்பிலான பணம் விடுவிக்கப்பட்டது என  மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News April 8, 2024

மீனவர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தம்

image

இலங்கை சிறையில் உள்ள இரண்டு காரைக்கால் விசைப்படகு ஓட்டுனர்கள் (ம) தங்களின் விசைப்படகை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 4ஆம் தேதி முதல் அறிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இன்றுடன் 5ஆம் நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

News April 8, 2024

எம்ஜிஆரிடம் ஓட்டு கேட்ட திமுக நிர்வாகிகள்

image

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் மண்டல குழு தலைவர் திமுக தனியரசு பொதுமக்களிடமும் சாலையில் உள்ள வியாபாரிகளிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது கலைக்குழுவை சேர்ந்த கலைஞர் ஒருவர் எம்ஜிஆர் போல் வேடம் அணிந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அவரிடம் திமுக நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்.

News April 8, 2024

பக்தர்களே நாளை முதல் துவக்கம்

image

மதுரை சித்திரை திருவிழாவின் மீனாட்சி திருக்கல்யாண விழா வரும் ஏப்.21ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. திருக்கல்யாண விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ரூ. 200, ரூ.500க்காண கட்டணச்சீட்டு நாளை முதல் ஏப்.13ம் தேதி இரவு 9 மணி வரை ஆன்லைனில் பெறலாம். இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in மூலம் பெற்றுக்கொள்ளலாம்

News April 8, 2024

தி.மு.க., காங்கிரஸ் மீது சீமான் சரமாரி குற்றச்சாட்டு

image

தமிழர்களின் பாரம்பரிய சொத்தான கச்சத்தீவை தாரை வார்த்த கட்சி காங்கிரஸ் அப்போது இங்கு ஆட்சியில் இருந்தது திமுக,மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியது காங்கிரஸ், அப்போதும் இங்கு ஆட்சியில் இருந்தது திமுக காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கிடையாது என்கிறது காங்கிரஸ் என்று சேலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.

News April 8, 2024

வாணியம்பாடி: தனியார் வங்கி பணம் பறிமுதல்

image

 திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாணியம்பாடி பகுதியில் வாகன சோதனை செய்யும் போது உரிய ஆவணங்கள் இன்றி ஏடிஎம்மில் பணம் நிரப்ப கொண்டு சென்ற பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News April 8, 2024

மயிலாடுதுறையில் தொடர் நடவடிக்கை

image

மயிலாடுதுறை அருகே நண்டலாறு மற்றும் வீரசோழன் ஆறு ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை முற்றிலும் குறைக்கும் வகையில் இன்று தொடர் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் சாத்திய கூறுகள் உள்ளடக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் கள உபகரணங்களை கொண்டு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News April 8, 2024

மயிலாடுதுறையில் ஐஜி தலைமையில் ஆலோசனை

image

மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் மற்றும் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News April 8, 2024

நாளை முற்றுகையிட போவதாக அறிவிப்பு

image

உடுமலை அருகே பொன்னாளம்மன் சோலையில் இன்று விவசாயி குணசேகரனை அதே பகுதியை சேர்ந்த திமுகாவை சேர்ந்த சதிஸ்குமார் என்பவர் திமுகவிற்கு ஏன் வாக்கு சேகரிக்க வரவில்லை எனக்கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நாளை ( ஏப்ரல் 9 ) உடுமலை பழனி சாலையில் உள்ள திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்து உள்ளது.

error: Content is protected !!