Tamilnadu

News March 28, 2024

தென்காசியில் உறுதியளித்த தமிழ்நாடு முதல்வர்

image

தென்காசி மக்களவை தொகுதிக்கான இந்தியா கூட்டணி தேர்தல் பிரச்சாரம் கிருஷ்ணன் கோயில் பகுதியில் நேற்று (மார்ச் 27) இரவு நடைபெற்றது. இதில் பேசிய தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் முதல் மு க ஸ்டாலின் நெல்லை சங்கரன்கோவில் இடையே ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஆலங்குளம் சுரண்டை சேர்ந்த வரும் வழியாக சங்கரன்கோவில் இணைக்கும் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.

News March 28, 2024

கடலூர் தொகுதியில் 24 பேர் வேட்பு மனு தாக்கல்!

image

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. அதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று கடலூர் தொகுதியில் போட்டியிட 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் நா.த.க மணிவாசகம், தேமுதிகவில் கூனங்குறிச்சியை சேர்ந்த பெரியநாயகராஜ் ஆகியோர் 2-வது மனு உட்பட 7 பேர் என, கடலூர் தொகுதியில் மொத்தம் 24 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

News March 28, 2024

கரூரில் ஜோதிமணி பேட்டி

image

கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசியதில், தமிழ்நாட்டில் மக்கள் மோடி ஆட்சிக்கு எதிராக கொலை வெறியாக உள்ளனர். இப்போது 5 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி, மக்கள் கஷ்டப்படும் போது ஏன் வரவில்லை. எத்தனை முறை வந்தாலும் ஒன்றும் நடக்காது என்றார்.

News March 28, 2024

மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரிப்பு 

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன், கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் மாட்டு வண்டியை ஓட்டியபடி வாக்குகளை சேகரித்தார். இதில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தனர். 

News March 28, 2024

தரமான அரிசி வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்

image

கோவை மாவட்டத்தில் 1538 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 11.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மாதந்தோறும் வாங்குகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகள் வழங்கப்பட்ட அரசி தரமில்லை என புகார் எழுந்ததை தொடர்ந்து கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கலெக்டர் கிராந்தி குமார் ஆய்வு செய்தார். அப்போது அரிசி தரமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News March 28, 2024

வாகனத்தை தாண்டி குதிரை சாகசம்

image

குன்னூர் மவுண்டன் ஜிம்கானா என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வீராங்கனைகள் கலந்து கொண்ட குதிரை சாகச நிகழ்ச்சி நேற்று (மார்ச் 27) நடைபெற்றது. இதில், குதிரைக்கான சவாரி, ஆசர்லே, ஷோ ஜம்பிங், டிரிக் ஜம்பிங் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில், ராணுவ வாகனத்தை தாண்டி பாய்ந்தது பலரை கவர்ந்தது.

News March 28, 2024

ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு 

image

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் பல்வேறு கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து புரட்சி முன்னணியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா நேற்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

News March 28, 2024

கோடை காலத்தில் கடைபிடிக்க வழிமுறைகள் 

image

சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பம் இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி கலெக்டர் கீழ்க்கண்ட விழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். இதில், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

image

ஈரோடு 2024 மக்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஈரோடு திண்டல் பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் உட்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 28, 2024

காஞ்சிபுரம்: தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க..!

image

காஞ்சிபுரத்தில், மக்களவை தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை கலெக்டர் கலைசெல்வி மோகன் நேற்று(மார்ச் 27) வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் தொகுதி பொது பார்வையாளர் புபேந்திர எஸ்.சௌத்ரி: 75488 81882;

காஞ்சிபுரம் தொகுதி காவல் பார்வையாளர் பாரத் ரெட்டி: 63855 15308;

காஞ்சிபுரம் தொகுதி செலவின பார்வையாளர் மதுக்கர் ஆவேஸ்: 72005 – 55395.

error: Content is protected !!