India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் 94.48% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.53% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 96.20% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 644 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 909 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.38 சதவீதமாக உள்ளது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.23 % தேர்ச்சி சதவீதம் அதிகம் என கல்வித்துறை சார்பில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், தென்காசி மாவட்டத்தில் 96.07தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 94.25 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 97.52 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கடலூர் மாவட்டத்தில் 94.36 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.32 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 96.29 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ( மே 6) வெளியானது. வேலூர் மாவட்டத்தில் 13535 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12524 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.53 சதவீதமாக உள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் 5393 பேரும், மாணவிகள் 7131 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், அரியலூர் மாவட்டத்தில் 97.25 தேர்ச்சி விகிதம் பெற்று மாநிலத்தில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம் குறைந்த அளிவிலான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம் குறைந்த அளிவிலான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் பாலாஜி நகரில் ரேணுகா(40) என்பவர் மர்மமுறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றினர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் காம்பவுண்ட் சுவருக்குள் குதித்து வீட்டுக்குள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியே சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் ஓவேலி வன சரக பகுதிகளில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி 3 நாட்கள் நடைபெற்றது . இதில் 10 குழுக்களில் 25 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். மலை முகடுகள், புல்வெளி மலைகள் மற்றும் நீர் நிலைகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் 267 வரையாடுகள் தென்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

புதுச்சேரிக்கு பொது விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடற்கரைக்கு வருவோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கழிப்பிடங்கள்தான்.கலவைக் கல்லூரி அருகே அமைக்கப்பட்ட ‘பயோ டாய்லெட்கள்’ செயலிழந்துவிட்டன. மக்கள் வருகைக்கு ஏற்ப கழிப்பிட வசதி ஏற்படுத்துவது மிக அவசியம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.