India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். அவர், தொகுதி முழுமைக்கும் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அவரை ஊருக்குள் வரக்கூடாது எனக் கூறி இஸ்லாமியர்கள் இன்று கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு சுந்தர சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரை முன் விரோதம் காரணமாக ஆரோக்கியசாமி தனது கூட்டாளிகளான சரவணன், விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து நேற்று நள்ளிரவில் விஜயகாந்தின் வீடு புகுந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து திருவேற்காடு போலீசார் ஆரோக்கியசாமி, சரவணன், விக்னேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அணையாகும். 261 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட இந்த அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து இன்று மோர் தானா அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நாகப்பாம்பு தென்பட்டது. இதனை கண்ட மாணவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ரவி தலைமையிலான வீரர்கள் பள்ளியில் உள்ள நாகப்பாம்பை பிடித்து அருகே உள்ள காப்புக்காட்டில் விட்டனர். உடனடியாக பள்ளியில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரபட்டி ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினர் சாரதா மணி தலைமையில் 80 பேரும், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் உமா மகேஸ்வரி ஏற்பாட்டில் 20க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் ஏப்ரல் 23ஆம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்டத்திலிருந்து கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் இன்று (ஏப்.10) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தேனி வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கரை சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான ,வானதி சீனிவாசன் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, நாளை திருச்செங்கோடு, குருசாமிபாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

சிவகங்கையில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் விதமாக வனத்துறையினா் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிங்கம்புணரி பகுதிகளில் மான், முயல், மயில்கள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட வன அலுவலா் பிரபா உத்தரவின்பேரில், 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரமலான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (ஏப்ரல்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நாளை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.