India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 30 – 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 30 – 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 30 – 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் அழகர்சாமி தயாரிப்பில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக கனிமொழி கீதம் பாடல் ஆடியோ இன்று வெளியிடப்பட்டது. பாடல் ஆடியோவை கனிமொழி கருணாநிதி இன்று வெளியிட்டார். இதில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் நேற்று சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வனத்துறையினர் சிறுத்தை தொடர்பாக தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் , தகவல்களை மயிலாடுதுறை மற்றும் அரியலூர் வனத்துறையினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க இரு அணியினரும் தயார் நிலையில் உள்ளதாக நாகை வன உயிரின காப்பாளர் இன்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி, பத்மநாப மங்கலத்தை சேர்ந்த இசக்கி என்பவர் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அதேபோன்று தெய்வச் செயல் புரத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த மாதம் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் தீமிதி திருவிழாவின் முதல் நாள் ஆரம்பம் இன்று (12.04.2024) தொடங்கியது. மேலும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14ஆம் தேதி விடுமுறை என்பதால் இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து பணியாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று பூச்செரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.