Tamilnadu

News April 11, 2024

குட்டி யானையின் பாசப் போராட்டம்

image

சத்தியமங்கலம் பண்ணாரி சரகத்தில் வனத்துறையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு பெண் யானை ஒன்று வயது முதிர்வு காரணமாக கீழே படுத்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்த பெண் யானை அருகே சுமார் 2 முதல் 3 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று சுற்றி சுற்றி வந்து பிளரி கொண்டிருந்தது.
இதைப்பார்த்த வனத்துறையினர் கண் கலங்கினர்.

News April 11, 2024

எங்களின் ரத்த உறவுகளுக்கு புனித ரமலான் 

image

மத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் பழனி, நெய்க்காரப்பட்டி, பெரியகலையம்புத்தூர் ஸ்ரீ ஹைகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு உட்பட்ட ஊர் பொதுமக்கள் ரமலான் வாழ்த்து கூறி பேனர் வைத்துள்ளனர். அதில், “மதத்தால் இணைந்த மனிதர்கள் அல்ல நாங்கள்; மனதால் இணைந்த மனிதர்கள்; எங்களின் ரத்த உறவுகளுக்கு புனித ரமலான் மற்றும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளது. 

News April 11, 2024

புதுகை: இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்காக ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

News April 11, 2024

சிதம்பரம்பட்டியில் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்

image

கயத்தாறு தாலுகா சிதம்பரம்பட்டி கிராமத்தில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் இருந்து செல்வதற்கு நடைபாதை இல்லாமல் அவதிப்பட்டனர். இதனால் தேர்தல் புறக்கணிப்பு என அறிவித்தனர். இதனால் கயத்தாறு தாசில்தார் நாகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர், பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பதாக அறிவித்ததை வாபஸ் பெற்றனர். 

News April 11, 2024

ஆட்சியர் தலைமையில் நடைபயண பேரணி

image

2024 மக்களவை தேர்தலையொட்டி 100 % வாக்களிப்பதன்
அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில்
நடைப்பயண பேரணி 5-ம் நாளான இன்று (11.04.2024) ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 11, 2024

லட்சத்தீபம் திருவிழா- தயாராகும் ஆஞ்சநேயர் கோயில்

image

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் லட்சதீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த ஆண்டு லட்சத்தீபம் ரத்தானதையடுத்து, இந்த ஆண்டு மிக விமர்சையாக லட்சதீப திருவிழா வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது. லட்சதீப விழாவையொட்டி,தெப்பக்குளம் சுத்தம் செய்யும் பணிகள் இன்று நடந்தது.

News April 11, 2024

தண்டாரம்பட்டு: சோகத்தில் மூழ்கிய விவசாயி

image

தண்டராம்பட்டு அடுத்த கீழ்ரவந்தவாடி கிராமத்தில் விவசாயி ஒருவர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். எதிர்பாராத விதமாக கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எறிந்தது. விவசாய நிலத்திற்கு வந்த விவசாயி  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

News April 11, 2024

ஈரோடு: புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மேலும் விடுப்பு வழங்காத நிறுவனங்கள் புகார்களை 99943 80605 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என, ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

புதுகை: பெண்ணின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

image

அன்னவாசல் அருகே ஊரப்பட்டியை சேர்ந்தவர் விஜயநிலா (33). இவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 7 இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் விஜயநிலா உடலை அடக்கம் செய்துள்ளனர். பின்னர் சாவில் சந்தேகம் இருப்பதாக விஏஓ புகாரையடுத்து நேற்று அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

News April 11, 2024

அல்வா கொடுத்த கலா மாஸ்டர்

image

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடன இயக்குனர் கலா மாஸ்டர் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது கடைக்காரர் ஒருவருக்கு கலா மாஸ்டர் அல்வா கொடுத்தார். இந்த செயல் தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

error: Content is protected !!