Tamilnadu

News April 5, 2024

கடலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

திருச்சி: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

ஏப்.15 முதல் மீன்பிடி தடை காலம்

image

கடலில் மீன்வளத்தை பெருக்க ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி ஏப்.15 நள்ளிரவு முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை என 61 நாட்களுக்கு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உதவுவதாக  புதுப்பட்டினம், வாயலுார், உய்யாலிகுப்பம், கடலுார் உள்ளிட்ட அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

News April 5, 2024

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு தள்ளிவைப்பு

image

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கின் விசாரணையை இம்மாதம் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News April 5, 2024

கோவையில் இதுவரை ரூ.7.66 கோடி பறிமுதல்

image

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனையில் இதுவரை 257 பேரிடம் இருந்து ரூ.7,66,93,404 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 156 பேருக்கு ரூ.2,16,87,170 திருப்பி அளிக்கப்பட்டது. மீதமுள்ள தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 5, 2024

விடுதி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவிகள் காயம்

image

பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் சிமென்ட் கூரை இடிந்து விழுந்தது. இதில் சமையல் பணியாளர் உட்பட 5 மாணவிகள் காயமடைந்தனர். 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காலை உணவு அருந்தி கொண்டிருந்த நேரத்தில் சுவர் விழுந்ததில் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த சமையலர் அபிராமி, நளினி, தர்ஷினி, ரெங்கநாயகி, தேவி உள்ளிட்ட 6 பேர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 5, 2024

கடலூரில் இளநீர் விற்பனை அமோகம்

image

கடந்த சில நாட்களாக கடலூரில் வெயிலின் தாக்கம் வாட்டி வதைக்கிறது. வெப்ப தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள குளிர்ச்சி தரும் பொருட்களை மக்கள் நாடி வருகின்றனர். அதன்படி, உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சி தரும் இளநீர் கடலூர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பல பகுதியில் விற்கப்பட்டு வருகிறது. ரூ.30 முதல் 40 வரை விற்கப்படும் இளநீரை, கடலூர் பொதுமக்கள், சிறுவர்கள் ஆர்வமுடன் வாங்கி பருகி வருகின்றனர்.

News April 5, 2024

திருச்சி விமான நிலையத்தில் பால்குடம்

image

திருச்சி விமானநிலையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் 41ம் ஆண்டு திருவிழாவையொட்டி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நகர்ப்புறங்களில் ஊர்வலமாக வந்து ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

News April 5, 2024

மயிலாடுதுறை: தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறை

image

மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News April 5, 2024

நாமக்கல்: போஸ்டர் வெளியிட்ட சிட்டி யூனியன் வங்கி

image

மக்களவை 2024 தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது இதனிடையே நாமக்கல் பகுதியில் அமைந்துள்ள வங்கிகள் அமைப்புகள் சார்பில் தேர்தல் போஸ்டர்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் நகரில் செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

error: Content is protected !!