India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறையில் ரோட்டரி கிளப் ஆப் டெல்டாவின் சிறப்பு கூட்டம் யூனியன் கிளப்பில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து தலைவர் சங்கர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, கோடநாடு மற்றும் வன பகுதி ஓரங்களில் என 100 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கூடுதலாக உள்ளது. எனவே கோடை விழாவுக்கு முன்பாகவே விடுதிகள் முன்பதிவு செய்யபட்டு நிரம்பி வழிகின்றன.

போடி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் போடி புதூரைச் சோ்ந்த மது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில், கொடுத்த கடனை திரும்பக் கேட்டு மது, முத்துப்பாண்டியை சாவியால் குத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதில், காயமடைந்த முத்துப்பாண்டி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸாா் மது மீது நேற்று (மே.3) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் உள்ள வில்லூண்டி தீர்த்தம் அழகிய கண்வரும் கடற்கரையாகும். ராமேஸ்வரத்தில் உள்ள 64 தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. இந்த கடல் மிகவும் அழகிய அமைதியான கடலாக தோற்றமளிக்கும். மேலும், கடலுக்கு அருகில் ஒரு தூய நீர் கிணறும் உள்ளது. இது ராமாயணப் புராணக் கதையுன் கூறப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த தீர்த்தம் அமைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலால் வெப்ப அலை வீசி வருகிறது. மதுரையில் தொடர்ந்து வெப்பம் 42 டிகிரி செல்சியஸ் ஆக இருந்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று மதுரை மாநகராட்சி மண்டலம் 3, சேதுபதி மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு வெப்பம் தணிக்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகம் இவரது கணவர் சேகர் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது மகன் நவீன் என்பவர் உடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டின் வெளியே தூங்கிய கற்பகம் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள குட்டையின் அருகே எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.

கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கோவில்பட்டி நிலையத்தில் இருந்து சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதில், தீயணைப்பு வீரர்களுக்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு சால்வை அணிவித்து நினைவு பரிசை வழங்கி பாராட்டினார். இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ். ஜேசிஐ நிர்வாகிகள் வெங்கடேஷ் ,சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நாளை வணிகர்கள் தினத்தை வியாபாரிகள் கொண்டாடும் பொருட்டு ஆண்டு தோறும் விடுமுறை அளித்து வருகின்றனர். சிறு வியாபாரிகள், பெரிய வியாபாரிகள் அனைவரும் நாளை விடுமுறை அளித்து வணிகர் தினத்தை கொண்டாட வேண்டுமாறு வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல் சத்தார் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த செல்வி கேஸ் ஐயப்பன் இவரின் மகன் தீபக் சாரதி சென்னை அருகே கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். மே தினத்தன்று தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற போது உயிர் இழந்தார். இவரது உடல் நேற்று இரவு உடுமலை கொண்டுவரப்பட்டு மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

வேலூர் எம்பி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மே 4) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.