Tamilnadu

News May 9, 2024

இ. பைக் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

image

நெல்லை மாவட்டம் முக்கூடல் சேர்ந்தவர் தசரத மகாராஜா ராஜபாளையத்தில் உள்ள தனியார் இ பைக் நிறுவனத்தில் கடந்த 2021ஆண்டு பைக் வாங்கி அதில் பல முறை பழுது ஏற்பட்டதன் காரணமாக நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நேற்று வழக்கு விசாரித்த ஆணைய தலைவர் பாதிக்கப்பட்டவருக்கு 25 ஆயிரம் மற்றும் பைக்கை பெற்றுக் கொண்டு அதற்கான பணத்தை திருப்பிகொடுக்க பைக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

News May 9, 2024

நீலகிரி எல்லையில் பிளாஸ்டிக் கழிவு பறிமுதல்

image

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் மற்றும் அதற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக-கேரளா எல்லையான பாட்டவயல் சோதனை சாவடியில்,
நுழையும் அனைத்து வாகனங்களையும் தினந்தோறும் ஆய்வு செய்துவருகின்றனர். வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்களை இருந்தால் பறிமுதல் செய்கின்றனர்.

News May 9, 2024

இ-பாஸ் ரத்து செய்யாவிட்டால்… எச்சரிக்கை!

image

நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்ற சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் காட்டேஜ்கள் 80 சதவீதம் காலியாக கிடக்கின்றன. எனவே இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், தவறினால்  அனைத்து காட்டேஜ்கள் மூடப்படும். இந்த தகவலை நீலகிரி மாவட்ட காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.

News May 9, 2024

நாமக்கல்:பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆலோசனை

image

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளரும் பள்ளி கல்வித்துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன் அவர்கள் இன்று நாமக்கல் விருந்தினர் மாளிகையில்” மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா அவர்களுடன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உட்பட பலர் பங்கேற்றனர்.

News May 9, 2024

நாகர்கோவிலில் நாஞ்சில் காண்காட்சி

image

கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்துக்கல்லூரி அருகில் நாஞ்சில் காண்காட்சி மற்றும் பொருட்காட்சி தினமும் மாலை முதல் இரவு வரை நடைப்பெற்று வருகிறது. இங்கு ஈபிள் கோபுரமும், புர்ஜ் கலிஃபா கோபுரமும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளது. பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்.

News May 9, 2024

குமரி ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

image

குமரி மாவட்டத்தில் குரூப் – 4 தேர்வுகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று(மே 7) நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்து கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் கல்வித்துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News May 9, 2024

குளச்சலில் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து

image

குளச்சல் மின் விநியோகப் பிரிவிற்கு உட்பட்ட செம்பொன்விளை – குளச்சல் பீடரில் இன்று(மே 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாஸ்தான்கரை, அண்ணாசிலை, கள்ளியடைப்பு, சைமன்காலனி, கோடி முனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோடைக்காலத்தை ஒட்டி பொதுமக்களின் நலன் கருதி இன்றைய மின்தடை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

கோவை: விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்.

image

சிங்கப்பூர் – கோவை விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு வந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,ஒரு பயணி நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.அவரிடமிருந்து ரூ.90 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான 10 தங்க கட்டிகள் மற்றும் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவரின் விபரம் அதிகாரிகள் வெளியிடவில்லை.

News May 9, 2024

திருச்சி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் அழைத்து முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதோ அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று கூறினார்.

News May 9, 2024

சிவகங்கை: தொழில் முனைவோர்களுக்கு விருது!

image

சிவகங்கை மாவட்டத்தில் 2023 – 24 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட தொழில்  முனைவோர்களுக்கு, மாநில மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு விருதுகள் தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது. எனவே தகுதியான தொழில் முனைவோர் awards.fametn.com என்ற தளத்தின் வாயிலாக மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!