India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டத்தில் கோடை மழை பெய்வதால் மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோடை மழை இடி மின்னலுடன் பெய்யும் போது வீட்டில் மிக்ஸி, கிரைண்டர்,கணினி, செல்போன் போன்ற மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மின் கம்பங்கள், மின் பெட்டிகள், மின் மாற்றிகள் ஆகியவற்றை தொட வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு இன்று பாளை மண்டல மேற்பார்வை மின் பொறியாளர் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சியில் கடந்த 2.5.2024ம் தேதி ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி அவரின் வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் ரவுடி வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில்,
குற்றவாளி மீது 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் அவரை இன்று குன்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார்.

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மக்களவை தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மே.13) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் இரவு வந்து மேற்கொள்ளும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. விபத்து அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்களில் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல் தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.

வாய்ப்புகள் நிறைந்த இந்த உலகத்தில் தங்களுக்கான துறையை சரியான முறையில் தேர்வு செய்து அதில் முழு கவனம் செலுத்தி தங்களது எதிர் கால பாதையினை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பாய்ச்சலில் நடைபெற்ற நான் முதல்வன் நிகழ்ச்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகரில் ஆதரவற்றோர் மற்றும் வீடற்ற நபர்கள் சாலையோரங்களிலும் பாலங்களுக்கு அடியிலும் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ரூ.1கோடியில் திருவெறும்பூர், உறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.அவற்றில் உணவுக்கூடம், சமையலறை, சுகாதார வளாகம் மற்றும் தியான மண்டபம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுமென மாநகராட்சி அலுவலர்கள் இன்று தெரிவித்தனர்.

அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி 2 ஆம் ஆண்டு முழுநேர பட்டயப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு https://www.tnpoly.in என்ற இணையதளத்தில் வருகின்ற 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். பழங்குடி மற்றும் பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

சேலம் அரசு ஐ.டி.ஐ.யில் ‘கடிகார பழுது நீக்கம்’ என்ற 3 மாத குறுகிய பயிற்சி நடைபெற உள்ளது. 10- ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் பயிற்சியில் சேர விரும்பினால் மே 22-ஆம் தேதிக்குள் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி நேரில் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 75026- 28826 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விருப்பமுள்ள மாணவர்கள் வரும் ஜூன். 07ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையமான” சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாணவர்கள் நேரில் வந்து Online மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் மே 12 வரை 496 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மே 6 முதல் 12 வரையிலான 1 வார காலத்தில் 1 திருநங்கை உட்பட 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.