India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊட்டி மார்க்கெட்டில் ‘ஜாவா’ குருவிகள் விற்கப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் குருவிகளை மீட்டனர். வனத்துறை அலுவலர் இன்று ( ஏப்.11) கூறுகையில், “ஜாவா குருவி தடை செய்யப்பட்ட பட்டியலில் இருப்பது கடைக்காரருக்கு தெரியாது. முதல்முறை என்பதால் அவருக்கு அறிவுரை மட்டும் வழங்கப்பட்டது” என்றார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வரும் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையிலான காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை நகரில் மீண்டும் சிறுத்தை வந்ததாக கூறப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என்றும், காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் நேற்று அறிவுறுத்தியுள்ளார்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் இயங்கி வருகிறது. நேற்று உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோவிலில் உள்ள 10 பொது உண்டியல்களில் 12 லட்சத்து 84,394 ரூபாயும், இரண்டு திருப்பணி உண்டியல்களில் 2 லட்சத்து 39,049 ரூபாயும், தங்கம் 51 கிராம், வெள்ளி 472 கிராம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

கறம்பக்குடி அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனா். கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு சில வாரங்களாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள பவளத்தானூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இவ்விழாவில் பொங்கல் வைபவம், கரகம் எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவையொட்டி, வள்ளி கும்மி, ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் நடனமாடினார்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (12.04.2024) தொடங்குகிறது. இதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கொடிமரத்தில் ஏற்றுவதற்குரிய கொடிக்கயிறு, ஆற்றூர் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலகமாக எடுத்து வரப்படுகிறது. இத்திருவிழா நாளை காலை 9 மணிக்கு கொடியேற்று நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் 10-ம் நாளான ஏப்ரல் 21-ந் தேதி சாமிக்கு ஆராட்டு நடக்கிறது.

ராணிப்பேட்டை: வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்.18 (ம) வாக்குப் பதிவு நாளான ஏப்.19 ஆகிய இரு நாட்களில் அரசியல் கட்சிகளோ, வேட்பாளா்களோ, அல்லது தனியாா் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ, மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதியின்றி தோ்தல் சம்பந்தமான விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

செங்கத்தில் நேற்று பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் பிரச்சாரம் செய்தார். அப்போது, அப்பொழுது தெருவோர செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடையில் அமர்ந்து பழைய செருப்பை தைத்துக்கொடுத்து வாக்கு சேகரித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாமக்கல் மாவட்ட காவல் துறை, வேலூா் உள்கோட்ட காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் பரமத்தி வேலூரில் நேற்று நடைபெற்றது. இந்த ஊா்வலத்தை பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தொடங்கி வைத்தாா். வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் அணிவகுப்பு ஊா்வலத்தில் கலந்துகொண்டனா்.
Sorry, no posts matched your criteria.