India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி ), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்தது இம்மாதம் துவக்கம் முதல் ஒரு முட்டை விலை ரூ.4.15 ஆக நீடித்து வந்தது. கடந்த 12ஆம் தேதி முட்டை விலை 5 பைசா உயர்ந்து ரூ.4.20ஆனது. இந்த நிலையில், நேற்று மாலை, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற, என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை, 10 பைசா உயர்த்தப்பட்டது.

நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டை பகுதியில் இன்றும் மதியம் மூன்று மணி அளவில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. பொதுமக்கள் இடையே கேட்டபோது அங்கே அருகில் குப்பை தொட்டிக்கு தீ வைத்துள்ளனர். அந்த தீயானது காரின் அருகே பற்றி எரிந்தது. இந்த தீயினால் 5 லட்சம் மதிப்புள்ள கார் கருகி நாசமாகியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை தீயை அணைத்தனர்

கோடைக்கால சிறப்பு ரயிலான சென்னை எழும்பூர் – திருநெல்வேலி ரயிலில் 2 குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு பதிலாக இரண்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் சேர்க்கப்படும் எனவும், இந்த பெட்டிகள் மே 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு விசைப் படகுகளில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏற்கனவே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகள் திரும்பியுள்ளன. மீன் பிரியர்களின் கூட்டம் யாரும் மீன் வாங்க வராததால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் நேற்று கலை இழந்துள்ளது.

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே கடந்த 12ஆம் தேதி உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புடைய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் வைக்கப்பட்டது. இதனையடுத்து, நகைகளுக்கான ஆவணங்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து வணிகவரி மற்றும் வருமானவரித்துறையினர் சரிபார்த்த நிலையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இன்று விடுக்கப்பட்டன.

ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான அ.கணேசமூர்த்தி கடந்த 28ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று
ஈரோடு – பெரியார் நகர் பகுதியில் உள்ள மறைந்த ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி இல்லத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின் கணேசமூர்த்தி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி ஏப்ரல் 20ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பார்வையற்றோர், காதுகேளாதோர் நல சங்கம் சார்பாக, அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு இன்று நடைபெற்றது. இதையடுத்து பிரெய்லி முறையில் பேலட் தாள்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம், வரிசை எண் அச்சடிக்கப்பட்ட விவரங்களை வாசித்து காட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சரயு இன்று துவக்கி வைத்தார்.

மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கிய நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கரை திரும்பி தங்களது படகுகளை மீன் பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனை அடுத்து புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகள் பழுது பார்க்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு ஏப்ரல்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் ஏப்ரல்.19ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன்.4ஆம் தேதி அன்று முழுவதும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுவதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். மேற்படி, உத்தரவினை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.