Tamilnadu

News April 12, 2024

நாகையில் மழைக்கு வாய்ப்பு

image

நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் பரவலான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

ராமநாதபுரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

தஞ்சை மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தஞ்சை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 12, 2024

அடையாறு ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

image

சென்னை, ஜாபர்கான்பேட்டை அடையாறு ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தனுஷ்(14) என்பவர் தனது நன்பர்களுடன் நேற்று அடையாறு ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

News April 12, 2024

நீலகிரி கலெக்டர் மிரட்டல்?

image

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரின் செலவை குறைத்து காட்ட வேண்டும், செலவின பதிவுகளால் வேட்பாளருக்கு பாதகம் நேர்ந்தால் கொலை செய்துவிடுவேன் என நீலகிரி தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் மிரட்டியதாக தேர்தல் செலவின பார்வையாளர் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். தாக்கல் செய்த செலவு கணக்கு ரூ.13 லட்சம், அதிகாரிகள் கணக்கீட்டின்படி ரூ.54 லட்சம் வருகிறது, வேறுபாடு ரூ.41 லட்சம் எனக் கூறப்படுகிறது.

News April 12, 2024

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம்

image

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர். செந்துறை அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரும்பு வேலியை சிறுத்தை தாவும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்களும் சிறுத்தையை நேரில் பார்த்துள்ளனர். காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News April 12, 2024

கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ப.சிதம்பர் பிரச்சாரம்

image

பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே சிவகங்கை எம்.பி தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  ‘திமுக அரசு 3 ஆண்டுகளில் முத்தான முத்திரை பதிக்கும் பல திட்டங்களை தந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் நிலைத்து உயரவும், மக்களின் நலன் காக்கவும் I.N.D.I.A கூட்டணி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றார்.

News April 12, 2024

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரிப்பு

image

சிவகாசி பெரியபள்ளி வாசலில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை நிகழ்வில் நேற்று சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி வாசலில் இருந்த இஸ்லாமிய மக்களுக்கு இனிப்புகள் வழங்கி ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை கூறியதுடன் பள்ளி வாசல் பகுதியில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

News April 12, 2024

விருத்தாசலம் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

image

விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் அமைந்துள்ள சீரடி சாயிபாபா ஆலயத்தில் நேற்று பங்குனி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு சாய் பாபாவிற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய் பாபாவை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

error: Content is protected !!