Tamilnadu

News April 3, 2024

பட்டுக்கோட்டை: 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு

image

மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப்போட்டி பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று(ஏப்.3) நடந்தது. நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சுகுமார் முன்னிலை வகித்தார். 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோலம் வரைந்தனர்.

News April 3, 2024

தேனி:டிடிவி துணைவியார் தேர்தல் பரப்புரை

image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களான மீனாட்சிபுரம் அடைக்கப்பட்டனர் பொட்டல் களம் வினோபாஜி காலனி சிலமலை கரட்டுப்பட்டி சில்ல மரத்துப் பட்டி ராசிங்காபுரம் நாகலாபுரம் பகுதிகளில் இன்று தேனி பாராளுமன்ற தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது துணைவியார் அனுராதா தினகரன் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

News April 3, 2024

தி.மலை அருகே இருவர் கைது

image

சாத்தனூர் வனச்சரகம் பூ மலை காப்புக்காட்டில் வனச்சரக பணியாளர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்பு காட்டை ஒட்டி கிணற்றில் விழுந்த சிறிய புள்ளி மானை எடுத்து அறுத்து கூறு போட்டு கறியை விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை கைது செய்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி இருவருக்கும் தலா 30 ஆயிரம் வீதம் மொத்தம் 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

News April 3, 2024

மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

image

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், அனைவரும் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதனை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News April 3, 2024

மயிலாடுதுறை: கோவிலில் வழிபாடு

image

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் எனும் குமர கோவிலில் பங்குனி மாத செவ்வாய்கிழமையை ஒட்டி நேற்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக முருகப் பெருமானுக்கு பால் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ மலர் அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

News April 3, 2024

சென்னை: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

image

சென்னை, கதீட்ரல் சாலை அமராவதி ஓட்டல் முன்பு உள்ள சர்வீஸ் சாலை பாதாள சாக்கடை மேன்ஹோல் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதனால், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மேற்கண்ட இடத்தில் 7 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரத்தில் சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால், இன்று(ஏப்.3) முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News April 3, 2024

செங்கல்பட்டு:திமுக ஒன்றிய பெருந்தலைவர் மீது புகார்?

image

சித்தாமூர் திமுக ஒன்றிய செயலாளராகவும் சித்தாமூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் இருப்பவர் ஏழுமலை. இவர் மீது சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள பெண் தலைவர்கள் பலர் ஒன்றினைந்து அடுக்கடுக்கான புகார்களை அரசு முக்கிய அலுவலர்களுக்கு நேற்று அனுப்பி வைத்தனர். அதில் அரசு முக்கிய திட்டங்களை அதிகார துஷ்பிரயோகம் செய்து தனக்கு வேண்டியவர்கள் மூலம் அதில் ஊழல் புரிவதாக புகார் அளித்துள்ளனர்.

News April 3, 2024

அரியலூர்: பூத் ஸ்லிப் வழங்கிய ஆட்சியர்

image

சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகளை வழங்கினார்.

News April 3, 2024

காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் பி.ஆர்.பாலகிருஷ்ணன்(ஐ.டி. – ஓய்வு) தமிழகத்திற்கான சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, வேட்பாளரோ, அரசியல் கட்சியினரோ அல்லது பொது மக்களோ தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 93452 98218 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

மத்திய அரசை எச்சரித்த தமிழக முதல்வர்

image

இலங்கையை கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சனத்தில் பிரதமர் மோடி கச்சத்தீவை பற்றிப் பேசலாமா? நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன் என்று வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 2) நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

error: Content is protected !!