Tamilnadu

News April 5, 2024

சென்னையில் தவறி விழுந்த 2 இளைஞர்கள் பலி

image

சென்னை விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே இன்று காலை பீகாரைச் சேர்ந்த இரு வடமாநில இளைஞர்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வந்தனர். திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்து தலையில் காயமடைந்து உயிர் இழந்தனர். ரயில்வே போலிசாருக்கு தகவல் அளித்தபின் உடலைக் கைப்பற்றிய கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

News April 5, 2024

2024 தேர்தலில் சிறப்பு தொகுதியான ‘கோவை’

image

கோவை தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களாக 18-19 வயது நிரம்பியவர்கள் 31ஆயிரத்தி 382 பேர் உள்ளனர். அதைபோல் 20-29 வயது உடையவர்களாக 3 லட்சத்து 18ஆயிரத்து 145 வாக்காளர்கள் உள்ளனர். இதனால் இளம் வாக்காளர்களின் ஓட்டுகள் வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் இந்த தேர்தல் அமைந்துள்ளது.

News April 5, 2024

கள்ளக்குறிச்சி: ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏரி வண்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெயராமன் (வயது29). இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அங்கு ஆன்லைன் சூதாட்டம் விளையாடி ரூ.18 லட்சம் இழந்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று இரவு சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

News April 5, 2024

மதுரை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி

image

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். இக்கோவிலில் பங்குனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு நாளை ஏப்ரல் 06ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

News April 5, 2024

திருவாரூர் தபால் வாக்கு ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட விவேகானந்தர் தெரு தெற்கு சேத்தியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செலுத்துவதைத் திருவாரூர் மாவட்ட அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சாரு ஸ்ரீ இன்று நேரில் பார்வையிட்டார். இதில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் வட்டாட்சியர் செந்தில் உடனிருந்தனர்.

News April 5, 2024

நாகையில் நாளை ஒரே இடத்தில் வேட்பாளர்கள்

image

நாகை தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இணையும் கலந்தாய்வு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நாகை மேலக்கோட்டை வாசல் வி.பி.என் மகாலில் நடக்கிறது.
எனவே வணிகர்கள், சேவை சங்கத்தினர், பொதுமக்கள் என நாகை மாவட்ட வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

வாக்குபதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி

image

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இன்று தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக இரண்டாம் முறை கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடிக்கு மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பொருட்டு ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. இதில் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா, முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் பேசினார். 

News April 5, 2024

பெரம்பலூர் அருகே விபத்து

image

பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை செங்குணம் பிரிவுசாலை அருகில் நேற்று (ஏப்ரல் 4) திருவண்ணாமலையிலிருந்து திருச்சி எடுத்துச் சென்ற 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் ஏற்றி வந்த மினி வேன் பின் டயர் வெடித்து ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த கல்வி அலுவலர் ஓட்டுனரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

News April 5, 2024

சதுரகிரிக்கு நாளை முதல் அனுமதி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை ஏப்.6 ஆம் தேதி முதல் ஏப்.9 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் மலை கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாளில் மழை பெய்தால் மலையேற செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

குளிர்பானத்தில் கிடந்த ரப்பர் பொருள்!

image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள ஒரு கடையில் இன்று மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது குழந்தைக்கு பிரபலமான குளிர்பானம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த குளிர்பானத்தில் ரப்பர் போன்ற பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சுகாதார துறையினர் கடையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!