India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் கழித்து கட்டுமான பணிகள் துவங்கியுள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தற்போது வேகமெடுத்து வருவதாகவும் இதுவரை 13 வகையிலான முதல் கட்ட கட்டுமான பணிகள் நிறைவுற்றுள்ளதாகவும் எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வந்தவாசி அடுத்த பெரிய புறக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 2020ஆம் வருடம் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வண்புனர்வு செய்ததால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி பார்த்த சாரதி அவர்கள், செல்வகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

மக்களவைத் 2024 தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளத. இதனிடையே அரசு அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார் தனது தபால் வாக்கினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில் இன்று மகிழ்ச்சியுடன் செலுத்தினார்.

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 81 லட்சத்தி 13,000 மதிப்புள்ள ரொக்கப்பணம், பரிசுப் பொருட்கள், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் செய்தார். இதற்காக அவர் மதுரையிலிருந்து தனி ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வந்தார். பிரச்சாரத்திற்கு சென்ற பின்னர் அவர் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் பணமோ பொருட்களோ கைப்பற்ற படவில்லை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்கு பதிவு மையத்தில் நடைபெற்றது. இதை ஆட்சியர் வளர்மதி மற்றும் மாவட்ட காவல் SP கிரண் ஸ்ருதி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தனது வாக்கினை பதிவு செய்தார்.

மக்களவைத் 24 தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று நடைபெறுகிறது.100% வாக்களிக்க வேண்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.உமா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதன் ஒரு கட்டமாக வருகிற 16-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனைவரும் வாக்களிக்க வேண்டி சைக்கிள் பேரணி நடைபெறுகிறது விருப்பமுள்ளவர்கள் 85086 41786 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் விவரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் இடையர்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். அவரது மனைவி தங்கராணி ஆகியோர் தனது பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று உண்ணாவிரதம் இருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்ரல்.25ஆம் தேதிக்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அங்கிருந்து புறப்பட்டனர்.

2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இ.ந்.தி.யா கூட்டணியின் வேட்பாளரான சசிகாந்த் செந்திலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.அப்போது வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆளுயர மாலை அணிவிக்கபட்டது.

ஆர் கே நகர் தொகுதி தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள டி எச் சாலையில் மூன்றடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அந்த பகுதியில் உள்ள மக்கள் பள்ளத்தில் யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக கொம்பு வைத்துள்ளனர். மாநகராட்சிக்கும் நெடுஞ்சாலை துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.